பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கும்வரை காத்திருக்கவில்லை. அமைச்சர்களின் கேள்வி நேரத்தில் சில கேள்விகளுக்குப் பதிலளித்த பின்னர் புறப்பட்டுச் சென்று விட்டார்.
ஜோகூர் பாரு சுல்தானா அமினா மருத்துவமனை தீ விபத்து அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
ஆனால். கடந்த காலத்திலிருந்து பார்த்தால் பிரதமர் ஒன்றிரண்டு கேள்விகளுக்குப் பதிலளித்த பிறகு அவையில் இருப்பதில்லை.
ஈராண்டுகளுக்கு முன்னர் பக்ரி எம்பி, எர் டெக் ஹுவா ஒரு புள்ளிவிவரத்தைக் காண்பித்தார். நஜிப் பிரதமரான 2009-இலிருந்து 2014 ஜூன் 17வரை 358 நாள்களில் 26 நாள்கள்தாம் நாடாளுமன்றத்துக்கு வந்தாராம்.
இதில் எந்த முன்னேற்றமும் ஏற்பட்டிருப்பட்டிருப்பதாக தெரியவில்லை.
இன்று நண்பகல் 12 மணிக்குப் பிறகு பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியபோது அவையில் 30 எம்பிகளுக்கும் குறைவாகத்தான் இருந்தார்கள்.
அமைச்சர்களோ துணை அமைச்சர்களோ இல்லை.
இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும் வரவு-செலவு மீதான விவாதங்களில் பெரும்பாலும் இப்படித்தான். அமைச்சின் அதிகாரிகள் அங்கிருப்பார்கள். விவாதங்களைக் குறிப்பெடுத்துக் கொள்வார்கள்.
பட்ஜெட் விவாதத்தின்போது அமைச்சர்களும் அவையில் இருக்க வேண்டாமா என்று அவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியாவிடம் கேட்டதற்கு, “அதை நீங்கள் அவர்களிடம்தான் கேட்க வேண்டும்”, என்றார்.
ஒருவேளை GST-க்கு அதுதான் GOLF அல்லது SHOPPING அல்லது TRAVEL என போயிருப்பார். இல்லையென்றால் PENDEK KATA கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்– இன்றைய நிலை
பட்ஜெட்டை ஆதரிக்க நாடாளுமன்றத்தில் ஆட்டு மந்தைகள் கூட்டம் இருக்கும்போது பிரதமர் நாடாளுமன்ற பட்ஜெட் விவாதத்துக்காக நாடாளுமன்றத்திற்கு வருவதும் வராமல் இருப்பதும் ஒன்றுதான்.