சிரியாவில் 250க்கும் மேற்பட்ட கிறிஸ்டியன் குழந்தைகளை ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தினர் பேக்கரி மிசினில் போட்டு கொடூரமாக கொலைசெய்யப்பட்டதாக சிரியாவைச் சேர்ந்த கிறிஸ்டியன் பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஐஎஸ் தீவிரவாதிகள் குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமைகள் கழகம் சிரியாவைச் சேந்த ஆலைச் அசப் என்ற பெண்ணிடம் நேர்காணல் எடுத்துள்ளது.
அப்போது அவர் கூறிய சில தகவல்கள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தன. அவர் கடந்த 2014 ஆம் ஆண்டு சிரியாவின் முக்கிய நகரமான ஆட்ரா அல் உம்மாலையா ஐஎஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அவர்கள் கட்டுப்பட்டுக்குள் வந்தவுடன் அவர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அழிக்கப்பட்டன. அதற்கான காரணம் அப்போது தெரியவில்லை என்றும் அதன் பின்னர் ஒருவர் தன்னிடம் கிறிஸ்டியன்களை எல்லாம் ஐஎஸ் இயக்கத்தினர் கொலைசெய்து வருவதாக கூறினார்.
அதன் பின்னர் 250க்கும் மேற்பட்ட 4 வயதுக்கும் குறைவான குழந்தைகளை பேக்கரிக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கிருந்த 6 பேர் இந்த குழந்தைகள் அனைவரையும் பேக்கரி மெசினில் போட்டு கொடூரமாக கொலைசெய்ததாகவும் கூறியுள்ளார்.
இதை அறிந்த நான் தன் மகனிடம் அவர்கள் வந்து கேட்டால் உன்னுடைய பெயர் Khaled என்று கூறு என்றும் உண்மையான பெயரான George என்பதை கூறிவிடாதே என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் தீவிரவாதிகள் தன் மகனை தனியாக அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அவன் உண்மையை கூறியதால் அவனையும் இவர்கள் கொலை செய்து விட்டனர் என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
அது மட்டுமில்லாமல் கடந்த 2014 ஆம் ஆண்டு மட்டும் 1000க்கும் மேற்பட்ட கிறிஸ்டியன்களை அவர்கள் கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் தற்போது வரை நீடித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
-http://news.lankasri.com