நவம்பர் 19 பேரணி: பெர்சே போலீசுக்கு அறிவிப்பு தாக்கல் செய்துள்ளது

 

Bersihsubmitsnoticetopoliceபோலீசிடம் பெர்சே அதன் நவம்பர் 19 பேரணிக்கு அறிவிப்பு தாக்கல் செய்துள்ளது. சிகப்புச் சட்டையினர் அதே நாளில் வேறொரு பேரணி நடத்துவதற்கு போலீசிடம் மூன்று நாட்களுக்கு முன்பு ஓர் அறிவிப்பு தாக்கல் செய்துள்ளனர்.

போலீஸ் தலைமையகம் புக்கிட் அமானிலும் டாங் வாஙி மற்றும் பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைமையகங்களிலும் இன்று அறிவிப்புகள் தாக்கல் செய்யப்பட்டதாக பெர்சே தலைவர் மரியா சின் கூறினார்.

தாங்கள் டாத்தாரான் மெர்டேக்காவுக்கு பக்கத்தில் கூடப் போவதாக பெர்சே போலீசிடம் தெரிவித்துள்ளது. ஒரு குறிப்பிட்ட கூடுமிடம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை  என்று  மரியா மேலும் கூறினார்.

சிகப்புச் சட்டையினரின் தலைவர் ஜமால் யூனுஸ் அவர்களுடைய இரண்டு பேரணியை நவம்பர் 5 மற்றும் நவம்பர் 19 இல் நடத்துவதற்கான அறிவிப்பை போலீசாரிடம் தாக்கல் செய்துவிட்டதாக முன்னதாக மலேசியாகினியிடம் கூறினார்.

சிகப்புச் சட்டையினர் தங்களுடைய பேரணி அறிவிப்பை போலீசிடம் பெர்சேக்கு முன்பே தாக்கல் செய்து விட்டதால் போலீஸ் அவர்களுக்கு மட்டும் அனுமதி கொடுத்தால் என்னாவது?

இது குறித்து கவலைப்படாத மரியா, பேரணி நடத்துவதற்கான நேரம் மற்றும் இடம் பற்றிய முடிவு இறுதியானது என்றார்.

நவம்பர் 19 இல், 300,000 ஆதரவாளர்கள் சிகப்புச் சட்டை பேரணியில் கலந்துகொள்ள உறுதியளித்துள்ளனர் என்று கூறிக்கொண்ட சுங்கை பெசார் அம்னோ தொகுதி தலைவர் ஜமால், “பெர்சேயின் பேரணியை நிறுத்துவதற்கு நாங்கள் எதையும் செய்வதற்கு தயங்கமாட்டோம். எனக்கு, எங்கள் போராட்டம் தொடரும், எங்களை இரத்தத்தில் குளிப்பாட்டினாலும்கூட”, என்று கூறினார்.

ஜமால் கூட்டம் நடத்தலாம், ஆனால்  எங்கள் நிலைப்பாடு “வன்செயலைக் கொண்டுவரக் கூடாது” என்று மரியா கூறினார்.

“அவருக்கு நோக்கம் இருக்கிறது. இந்த மிரட்டலுடன் அவர்களை கூடுவதற்கு போலீஸ் அனுமதித்தால் நான் அதிர்ச்சியடைவேன்”, என்றாரவர்.

ஜமாலின் மிக அண்மைய மிரட்டல் குறித்து போலீஸ் புகார் செய்வது பற்றி தமது வழக்குரைஞர்களுடன் ஆலோசிக்கப் போவதாக மரியா தெரிவித்தார்.