அன்று சிதைந்த முகம்! இன்று அழகு தேவதையாய் மாறிய பெண்

விசித்திர நோயால் பாதிக்கப்பட்டு முகமாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண் மூன்று வருடங்களுக்கு பின்னர் தனது முகத்தை வெளி உலகுக்கு காட்டியுள்ளார்.

Joanna என்னும் இளம் பெண் முன்று வருடங்களுக்கு முன்னர் Neurofibromatosis என்னும் விசித்திர நரம்பு வியாதியால் பாதிக்கப்பட்டார்.

இதனால் அவரால் எதையும் சாப்பிடவோ, மெல்லவோ, பேசவோ கூட முடியாமல் அவஸ்தை பட்டு வந்துள்ளார்.

இதனையடுத்து போலந்து சென்று பிரபல மருத்துவரான Adam Maciejewski சந்தித்துள்ளார். அவரின் ஆலோசனை படி அவருக்கு முகமாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

தற்போது மூன்று வருடங்களுக்கு பின்னர் அந்த பெண்ணும் அந்த மருத்துவரும் பத்திரிக்கையாளர்களை சந்தித்துள்ளனர்.

அதில் மருத்துவர் Adam பேசியதாவது, Joanna வுக்கு நானும் எனது குழுவினரும் 23 மணி நேரங்கள் தொடர்ந்து இந்த முகமாற்று அறுவை ஆப்ரேஷனை மேற்கொண்டோம். அவரின் தோலின் 80 சதவீதத்தை வேறு தோலை கொண்டு மாற்றியுள்ளோம்.

அவரால் தற்போது நன்றாக சாப்பிடவும், பேசவும் முடிகிறது. அவரின் தோலை 80 சதவீதம் மாற்றிவிட்டதால் அவருக்கு மீண்டும் அந்த Neurofibromatosis நோய் வருவதற்கு வாய்ப்பில்லை என அவர் கூறியுள்ளார்.

மருத்துவர் Adamக்கு இது இரண்டாவது முகமாற்று சிகிச்சை என்பதும் ஏற்கனவே அவர் ஒரு ஆணுக்கு 2010ல் முதல் முகமாற்று சிகிச்சையை செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-http://news.lankasri.com