பிரித்தானிய நாட்டில் குடியேறியுள்ள ஒரு அகதி குடும்பத்திற்கு ரூ.7.62 கோடி மதிப்பிலான சொகுசு வீட்டை அரசு வழங்கியுள்ளது பொதுமக்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை எழுப்பியுள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கமெரூனில் பிறந்த தம்பதி இருவரும் முதலில் பிரான்ஸ் நாட்டில் குடியேறியுள்ளனர்.
பின்னர், சில வருடங்களுக்கு பிறகு தங்களுடைய இளம் வயதில் பிரித்தானிய நாட்டில் புகலிடம் கோரி சென்றுள்ளனர்.
தற்போது இத்தம்பதிக்கு 8 பிள்ளைகள் உள்ளனர்.இங்கிலாந்து அரசு அதிக எண்ணிக்கையில் குடும்ப உறுப்பினர்கள் உள்ளதால் இவர்களுக்கு ஆடம்பரமான ஒரு வீட்டை லூடன் நகரில் ஒதுக்கியுள்ளது.
மேலும், இக்குடும்ப செலவிற்காக ஆண்டுக்கு 44,000 பவுண்ட் அரசு நிதியுதவியும் வழங்கியது.
ஆனால், இந்த வீட்டில் போதிய வசதிகள் இல்லை என தம்பதி இருவரும் உள்ளூர் கவுன்சிலில் புகார் கொடுத்துள்ளனர்.
இப்புகாரை தொடர்ந்து குடும்பத்தினரின் அடிப்படை தேவையை உணர்ந்து தற்போது ஒரு ஆடம்பர வீட்டை Milton Keynes என்ற நகரில் ஒதுக்கியுள்ளது.
பல்வேறு வசதிகள் உடைய இவ்வீட்டின் மதிப்பு 4,25,000 பவுண்ட்(7,62,48,962 இலங்கை ரூபாய்) ஆகும்.
தற்போது இவ்வீட்டிற்கு குடியேறியுள்ள குடும்பத்தினர் ஒவ்வொரு மாதமும் செலுத்த வேண்டிய 1,200 பவுண்ட் வாடகையை செலுத்த தவறி வருவதாக அருகில் குடியிருப்பவர்கள் புகார் கூறி வருகின்றனர்.
‘உள்ளூர் கவுன்சில் இக்குடும்பத்தினருக்கு மட்டும் ஆடம்பர வசதிகளை அளித்து பாரபட்சம் காட்டுகிறது. இதே போல், பிற குடியேறிகளுக்கும் இந்த அரசு ஆடம்பர வசதிகளை அளிக்குமா?’ என்ற கேள்வியை பொதுமக்கள் எழுப்பிவருகின்றனர்.
-http://news.lankasri.com