முழுமையாக அழிந்து போகும் பேராபத்தில் பூமி!! விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

earth-dayபாரியளவிலான ஐந்து ஆபத்தினை தற்போது பூமி எதிர்கொண்டுள்ளதாக விஞ்ஞானிகள் குழுவொன்று சுட்டிக்காட்டியுள்ளது.

ஏற்படப் போகும் பேராபத்தினை சிறியளவில் கட்டுப்படுத்த கூடிய போதிலும், பாதிப்புக்கள் ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாதென போர்ப்ஸ் சஞ்சிகை சுட்டிக்காட்டியுள்ளது.

பெரிய விண்கல் ஒன்று பூமியுடன் மோதும் ஆபாயம் உள்ளது. எல்லையற்ற அண்டம் முழுவதும் எண்ணிக்கையற்ற விண்கற்கள் உள்ளமையினால் இவ்வாறான விபத்து இடம்பெறுவது சாதாரண ஒன்றாகவே விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

பூமியின் மீது தற்போது வரையிலுள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கை 9920 ஆகும். இவற்றுள் 4700 அமெரிக்காவுக்கும் 4200 ரஷ்யாவுக்கும் சொந்தமானதாகும். இந்த ஆயுதங்கள் மூலம் பூமியை ஆயிரம் முறை வெடிக்க செய்ய முடியும் என விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளார்.

வருடாந்தம் ஏற்படும் பயங்கரமான புயல் பூமிக்கு அழுத்தத்தை பியோகிக்கின்றன. அவ்வாறான புயல் மூலம் பூமி அழிவடைய கூடும் என்பது விஞ்ஞானிகளின் கருத்தாகும்.

மிகவும் கொடூரமான வைரஸ்கள் பூமியில் வாழும் உயிரினங்களுக்கு அழுத்தத்தை பிரயோகிக்க கூடும் என விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். சார்ஸ், மர்ஸ், வசுரி போன்றவைகள் இதற்கு உதாரணமாக குறிப்பிடப்படுகின்றது.

பாரிய எரிமலைகள் ஒரே நேரத்தில் வெடித்து பூமியில் வாழும் உயிரிழங்கள் அழிந்து போக கூடிய வாய்ப்புகள் உள்ளதாகவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

-tamilwin.com