யாழில் இடம்பெறும் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய ஆவா குழுவின் முக்கியஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொக்குவில் பகுதியைச் சேர்ந்த ஒருவரை பயங்கரவாத குற்றத்தடுப்புப் பொலிஸார் காங்கேசன்துறையில் வைத்து இன்று பிற்பகல் வேளையில் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஆவா குழுவின் முக்கியஸ்தரை கொழும்பிற்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அண்மையில் ஆவா குழுவுடன் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
கொழும்பில் இருந்து செல்லும் பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினர் சந்தேகத்தின் பெயரில் இவர்களை கைது செய்கின்றனர்.
நேற்று யாழில் ஆவா குழுவுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் அறுவர் கைது செய்யப்பட்டனர்.
மேலும், இதற்கு முன்னர் கைது செய்யப்பட்ட மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு இன்று உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-http://old.tamilwin.com