யாழ். சங்கரத்தை பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வாள் வெட்டு சம்பவத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, துவிச்சக்கர வண்டியில் வீடு திரும்பிய குறித்த இளைஞர்கள் மீது இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த பகுதியில் ஒரு வித பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
-http://www.tamilwin.com

























