தலைகீழாக மாறப்போகும் அமெரிக்கா! இலங்கை பேராசிரியர் தகவல்

donaldவரலாற்றில் முதல் முறையாக அமெரிக்கா ஜனாதிபதி தேர்தல் முடிவுகளுக்கு சவால் விடுக்கும் வகையில் சர்ச்சைகள் வெடித்துள்ளன.

அமெரிக்க நீதிமன்றில் தேர்தல் தொடர்பில் மனு ஒன்று தாக்கதல் செய்யும் நிலைமை உருவாகிக் கொண்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

டொனால்ட் ட்ரம்பின் வெற்றிக்கு சவால் விடுக்கும் வகையில் முன்னெடுக்கப்படுகின்ற எதிர்ப்பு மற்றும் ஆர்ப்பாட்டங்களின் இறுதி முடிவு இந்த மனு தாக்கலாக இருக்கலாம் என பேராசிரியர் பிரதிபா மஹனாம ஹேவா குறிப்பிட்டுள்ளார்.

புதிய ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளன டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக அமெரிக்காவின் பல நகரங்களில் தற்போது எதிர்ப்பு வெளியிட ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கையை போன்று தேர்தல் ஆணையாளர் மற்றும் பொலிஸார் குறித்து அங்குள்ள அதிகாரிகளை, அமெரிக்க மக்கள் பெரிய அளவில் கண்டுக்கொள்வதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தேர்தல் ஆணையாளர் மற்றும் பொலிஸார் நேரடியாக செயற்படுகின்ற போதிலும், அமெரிக்காவில் அவ்வாறான நிலைமை இல்லை எனவும், இதுவரையில் வழங்கப்பட்ட தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொண்டமையே அதற்கு காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்கா தேர்தல் முடிவுகளை தொடர்ந்து எதிர்வரும் சில மாதங்களுக்குள் அமெரிக்க தலைகீழாக மாற கூடும் என பேராசிரியர் பிரதிபா மஹனாம ஹேவா மேலும் தெரிவித்துள்ளார்.

-tamilwin.com