முஸ்லிம்களை கடுமையாக விமர்சித்த டொனால்ட் ட்ரம்ப்பின் அதிரடி நடவடிக்கை!

donaldஇதுவரை காலமும் இல்லாத வகையில் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியும், நடைபெற்ற தேர்தல் முறையும் குறித்து ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு கோடீஸ்வர வர்த்தகரான டொனால்ட் ட்ரம்ப வெற்றி பெற்றுள்ளார். அவர் அமெரிக்காவின் 45ஆவது ஜனாதிபதியாக அடுத்தாண்டு பதவி ஏற்கவுள்ளார்.

இந்நிலையில் ஜனாதிபதி பிரச்சார காலங்களில் டொனால்ட் ட்ரம்ப்பினால் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமைந்துள்ளன.

தான் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டால், அமெரிக்காவுக்கு வரும் முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைக்கப்படும். முஸ்லிம் தீவிரவாதிகளுக்கு எவ்வித மன்னிப்பும் வழங்கப்படாதென ட்ரம்ப் தனது தேர்தல் பிரச்சாரங்களின் போது குறிப்பிட்டிருந்தார்.

எனினும் ட்ரம்ப் தனது வெற்றியின் பின்னர் முஸ்லிம்கள் தொடர்பில் வெளியிட்டிருந்த கருத்துக்களை இணையத்தளங்களில் இருந்து நீக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்காக ட்ரம்ப்பின் தேர்தல் ஏற்பாட்டாளர் தீவிரமாக செயற்பட்டு வருவதாக அமெரிக்க செய்தி சேவைகள் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, டொனால்ட் ட்ரம்ப் சீனாவுக்கு எதிராக செயற்படக்கூடாதென சீன அரசாங்க ஊடகங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

சீனாவுடன் ஆதரவாக செயற்படவில்லை என்றால் அமெரிக்கா பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் கூட்டங்களின் போது ட்ரம்ப் தொடர்ந்து சீனாவை விமர்சித்து வந்தார்.

அமெரிக்காவுக்கும், அமெரிக்க நிறுவனங்களுக்கும் கிடைக்க வேண்டிய தொழில் வாய்ப்புகள் சீனாவுக்கு கிடைப்பதாக அவர் விமர்சித்துள்ளார்.

அமெரிக்கா மீண்டும் சிறந்த நிலையை அடைய வேண்டும் என்றால் சீனாவுடன் புதிய பொருளாதாரம் மற்றும் வர்த்தக கொள்கைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் 45ஆவது ஜனாதிபதியாக எதிர்வரும் ஜனவரி மாதம் ட்ரம்ப் பதவி பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளார்.

அதன் பின்னர் வெளிநாட்டு கொள்கை தொடர்பில் அவர் என்ன தீர்மானங்களை மேற்கொள்வார் என சீனா அவதானமாக உள்ளதென சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

-http://www.tamilwin.com

https://youtu.be/mYW8BLjAwE0