பிரித்தானியாவை நிலைகுலைய வைத்த டோர்னாடூ புயல்! தூக்கி ஏறியப்பட்ட வீடுகள்

பிரித்தானியாவில் ஏற்பட்ட டோர்னாடூ புயல் காரணமாக வீடுகள் மற்றும் கார்கள் தூக்கிய ஏறியப்பட்டதால் பல்வேறு சேதங்களுக்கு உள்ளாகியுள்ளனர் பொதுமக்கள்.

பிரித்தானியாவின் இன்று காலை 10.30 மணி அளவில் சுமார் 95 கி.மீற்றர் அளவிற்கு அதிவேகமாக TORNADO புயல் வீசியதால், பிரித்தானியாவின் முக்கிய நகரமான West Wales பகுதியில் அமைந்துள்ள Clarach Bay என்ற கிராமம் அதிக பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

இதன் காரணமாக 550க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், அதிர்ஷ்டவசமாக யாருக்கு காயம் ஏற்படவில்லை என்று முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

புயலின் தாக்கம் அதிகம் காணப்பட்டதால் கிராமத்தின் முக்கிய வீடுகளின் அருகே இருந்த கார்கள் மீது மரங்கள் விழுந்து அதிக சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமில்லாமல் அவைகள் சாலைகளின் மத்தியில் விழுந்துள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் அனைத்தும் மாற்று வழியில் அனுப்பிவைக்கப்படுகின்றன.

இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், இது தீவிர காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பல்வேறு இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த நிலைமை நாளை மாலை 5 மணி வரை தொடரும் எனவும், இதன் காரணமாக ஆலங்கட்டி மழை மற்றும் பலத்த இடியுடன் மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் கூறியுள்ளார்.

முக்கியமாக நாட்டின் மத்திய மற்றும் மேற்கு பகுதிகளில் இதன் நிலைமை தொடரும் என்றும், இதன் காரணமாக லேசான மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து இன்று இரவு தென்மேற்கு ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து மற்றும் பல இடங்களில் பனியுடன் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது எனவும், மக்கள் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

-http://news.lankasri.com