புற்றுநோயின் தாக்கத்தால் மரணிக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. எந்த நாட்டினை எடுத்துக்கொண்டாலும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் நிச்சயம் இருக்கத்தான் செய்வார்கள்.
இப்படிபட்ட காலத்தில் எந்த விதமான நோய்களின் பாதிப்புகளும் இல்லாமல், நோய்கள் பற்றி தெரியாமல் வாழ்ந்து வரும் மக்கள் வசிக்கும் விசித்திரமான நகரம் ஒன்று இருக்கிறது.
இயற்கையை அழிக்காமல், ரசாயனம் கலந்த உணவுகளை சாப்பிடாமல், இருந்த இடத்திலேயே வேலை பார்க்காமல் இருக்கும் இந்த அதிசயமான நகரத்தை பற்றிய சில சுவாரசியமான தகவல் இதோ.
* புற்று நோய் பற்றி அறியாத விசித்திரமான நகரமானது, வட பாகிஸ்தான் பகுதியில் ஹுஞ்குட்ஸ் என்ற இடத்தில் உள்ளது.
* இந்த நகரத்தில் வாழ்ந்து வரும் ஹுஞ்சா என்னும் கூட்டத்தை சேர்ந்த மக்கள். அவர்கள் வாழும் அந்த நகரத்தை ஹுன்சா பள்ளதாக்கு என்று கூறுகின்றார்கள்.
* மேலும் இந்த நகரப் பகுதியில் வாழ்ந்து வரும் மக்கள் தங்களின் 70 வயது வரை இளமையாகவும், ஆரோக்கியமாகவும் மற்றும் வலிமையாகவும் இருகின்றார்கள்.
* இதனால் இந்த பகுதியில் வாழும் மக்களுக்கு புற்றுநோயின் பாதிப்புகள் இல்லாததால், புற்று நோய் பற்றி தெரியாமல் ஆரோக்கியமாக வாழ்கிறார்கள்.
* பொதுவாக பெண்களுக்கு 40 முதல் 50 வயதிலேயே கருத்தரிப்பு ஏற்படுவது மிகவும் கடினம். ஆனால், இங்கு வாழும் பெண்கள் 65 வயதிலும் கருத்தரிக்கிறார்கள்.
* நான்காம் நூற்றாண்டில் இந்த நகரத்திற்கு அலக்சாண்டர் வருகை தந்துள்ளார். இதனால் இங்கு வாழும் மக்கள் அலக்ஸாண்டர் தி கிரேட்-ன் வழிதோன்றல்கள் என கருதப்படுகிறது.
* இந்த நகரத்தில் வசிக்கும் மக்களின் ஆரோக்கியத்திற்கு முக்கிய காரணமாக இருப்பது, இவர்கள் பின்பற்றும் டயட் என்று கூறுகின்றார்கள்.
* இந்த மக்களின் உணவின் டயட் முறையில், பழங்கள், காய்கறிகள், பால், உலர்ந்த பழங்கள், முட்டை மற்றும் அதிக வால்நட்ஸ்கள் ஆகிய உணவுகளை சாப்பிட்டு வருகின்றார்கள்.
-manithan.com


























இந்த கிராமத்தில் தான் ஒரு பெண்ணை கல்யாணம் கட்ட வேண்டும்.
வாழ்த்துக்கள் !! 🙂