தன்னை கடுமையாக விமர்சித்த பெண்களுக்கு உயர் பதவி வழங்கிய டொனால்ட் ட்ரம்ப்! தப்பிக் கொண்டது இலங்கை!

001அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப் தனது அமைச்சரவைக்கு இரண்டு பெண்களை பெயரிட்டுள்ளார்.

தெற்கு கரோலினா ஆளுநராக தற்போது செயற்படுகின்ற நிகி ஹேலி (Nikki Haley) மற்றும் பெட்சி டிவோஸ் (Betsy DeVos) ஆகியோரே நியமிக்கப்பட்டுள்ளனர்.

நிகி ஹேலி ஐக்கிய நாடுகள் அமைப்பின் அமெரிக்க பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது 44 வயதில் உள்ள அவர் இந்திய சீக்கிய தம்பதிகளுக்கு பிறந்தவராகும்.

தெற்கு கரோலினாவில் ஆளுநராக நியமிக்கப்பட்ட முதல் பெண்ணும், அந்தப் பதவிக்காக நியமிக்கப்பட்ட முதல் சிறுபான்மையினரும் அவர் தான். ஐக்கிய நாடுகளுக்கான பிரதிநிதி என்பது அமைச்சு பதவிக்கு இணையானதாகும்.

58 வயதான பெட்சி டிவோஸ் கல்வி செயலாளராக பெயரிட்டுள்ளார்.

எப்படியிருப்பினும் டொனால்ட் ட்ரம்பினால் பெயரிடப்பட்டுள்ள இந்த பெயர்கள் செனட் சபையினால் அனுமதிக்கப்பட வேண்டும்.

டொனால்ட் ட்ரம்பினால் பெயரிடப்பட்டுள்ள இந்த இருவரும் இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் டொனால்ட் ட்ரம்ப்பை கடுமையாக விமர்சித்தவர்களாகும்.

ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்றில் நிகி ஹேலி முதலாவதாக டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக போட்டியிட்ட மாகோ ரூபியோ என்பவருக்கும், இரண்டாவதாக டேட் என்பவருக்கும் ஆதரவு வழங்கியுள்ளார்.

புலம்பெயர்ந்த முஸ்லிம்கள் அமெரிக்காவில் நுழைவதனை தடை செய்ய வேண்டும் என டொனாலட் ட்ரம்ப் வெளியிட்ட கருத்து தொடர்பில் நிகீ ஹேலி கடுமையான விமர்சனம் செய்தார்.

இந்த யோசனை அமெரிக்காவுக்கு பொருத்தமற்றது மற்றும் டெனால்ட் ட்ரம்ப் அமெரிக்கர் அல்ல. தான் டொனால்ட் ட்ரம்பிக் ரசிகை அல்ல எனவும் நிகீ ஹேலி அறிவித்திருந்தார்.

டொனால்ட் ட்ரம்ப் அவசியமற்ற விடயங்களில் தலையிடுவதாக கூறிய பெட்சி டிவோஸ், ஜனாதிபதி தேர்தல் முதல் சுற்றில் டொனால்ட் ட்ரம்பை எதிர்த்து போட்டியிட்ட ஒருவருக்கு ஆதரவு வழங்கியிருந்தார்.

இதேவேளை ஐ.நாவுக்கான அமெரிக்காவின் தற்போதைய பிரதிநிதியாக சமந்தா பவர் செயற்பட்டு வருகிறார்.

சமந்தா பவர் இலங்கை விவகாரத்தில் ஈடுபாடு கொண்டவராக இருந்தார் என்பதும், பொறுப்புக்கூறல் விவகாரங்களில் ஆர்வம் கொண்டிருந்தார்.

இலங்கை தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களில் சமந்தா பவர் கணிசமான பங்கை வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமகால இலங்கை அரசாங்கம் இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளை கொண்டுள்ளது. இந்நிலையில் இந்திய வம்சாவாளியை சேர்ந்த பெண்ணொரும் ஐ.நாவில் முக்கிய பதவி இருப்பதால், இலங்கைக்கு சாதகமான போக்கு காணப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

-http://www.tamilwin.com