முன்னாள் பிரதியமைச்சர் கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரதியமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் பயன்படுத்திய வாகனம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்வதற்காக கருணா இன்று அழைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், கைது செய்யப்பட்டுள்ள கருணா இன்று பிற்பகல் வேளையில் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய உறுப்பினராக இருந்த கருணா அதிலிருந்து விலகி, மஹிந்த ராஜபக்ஸவுடன் இணைந்து கொண்டார்.
மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக்காலததில் அவருக்கு பிரதியமைச்சர், மற்றும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் போன்ற முக்கிய பொறுப்புக்கள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-http://www.tamilwin.com
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=Rb0M-UmKqqY&list=PLXDiYKtPlR7ORkbt_LIzes74U4Gv50X4t
கருணா கைது கேட்க நல்லாத்தான் இருக்கு ! அவன் கொலைசெய்யப்பட்டான் என்று செய்தி வந்தால் இன்னும் நல்லா இருக்குமே என்றுதான் சொல்லவரேன்!!