338 பயணிகளுடன் பயணித்த விமானம் நடுவானில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிட்னியிலிருந்து சிங்கப்பூர் பயணித்த Scoot விமான நிறுவனத்திற்கு சொந்தமான The Boeing 787 Dreamliner என்ற விமானத்திலே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த வீடியோவில் விமானம் நடுவானில் பறந்துக்கொண்டிருக்கும் போது அதன் வலது இறக்கையிலிருந்து தீப்பொறி வருகிறது. இதைக்கண்ட பயணிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
எனினும், விமானம் குறிப்பிட்ட நேரத்தில் சரியாக எந்த வித கோளாறு இன்றி சிங்கப்பூரில் தரையிறக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து Scoot விமான நிறுவன செய்தி தொடர்பாளர் கூறியதாவது, சம்பவம் குறித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், விமானத்தில் வலது இன்ஜினில் தீப்பொறி வந்தயை அவர் உறுதி செய்துள்ளார்.
இதையறிந்த விமான குழுவினர் உடனே சிங்கப்பூர் விமான நிலையத்தை தொடர்புக்கொண்டு தீயணைப்பு துறையை தயார் நிலையில் இருக்கும் படி தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, தரையிறக்கப்பட்ட விமானத்தை ஆய்வு செய்ததில் வலது இன்ஜினில் எந்த கோளாறும் இல்லை என தெரியவந்துள்ளதாக கூறியுள்ளார்.
மேலும், பறவை ஏதேனும் இன்ஜினில் சிக்கியிருக்கலாம் என சந்தேகிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
-http://news.lankasri.com