உலகில் மிகப்பெரிய புதைகுழி கண்டுபிடிப்பு…! உங்களுக்கு தெரியுமா?

உலகிலேயே மிகப்பெரிய புதைகுழி சீனாவின் கின்லிங் மலைத்தொடரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஷாங்சி மாகாண நில வளங்கள் துறை நடத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது இந்த புதைகுழி குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த புதைகுழிகளுக்கு ‘ஹங்சோங் புதைகுழிகள்’ என பெயரிடப்பட்டுள்ளன. இந்த புதைகுழிப்பகுதியில் மொத்தம் 49 புதைகுழிகள் உள்ளன.

வடக்கு அட்ச ரேகையில் 32 மற்றும் 33 டிகிரியில் அமைந்துள்ள இந்த புதைகுழிப் பகுதி உலகிலேயே மிகப்பெரியது என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

 

இந்த புதைகுழிப் பகுதியானது சுமார் 600 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்டுள்ளது.

இதில் ஒரு மிகப்பெரிய புதைகுழியும்,17 பெரிய புதைகுழிகளும், 31 நடுத்தர அளவு புதை குழிகளும் அமைந்துள்ளன.

இந்த புதைகுழிப்பகுதியை கடந்த நான்கு மாதங்களாக அதிகாரிகள் ஆராய்ச்சி செய்து வருவதாகவும், அகச்சிகப்புக் கதிர்கள், ஆளில்லா விமானம் ஆகிய தொழில்நுட்பங்கள் மூலம் இந்த பகுதி ஆராயப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

49 புதைகுழிகள் மட்டுமல்லாது, சுமார் 50 குகைகளும் இந்த பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன.

இந்த புதைகுழிப் பகுதிக்கு அறிவியல் பூர்வமாக, தொழில்நுட்பங்களின் உதவியுடன் பாதுகாப்பளிக்க உள்ளதாக ஷாங்சி மாகாண அரசு அறிவித்துள்ளது.

-http://www.tamilwin.com