சவுதி அரேபியா நாட்டில் முகத்திரை அணியாத இஸ்லாமிய பெண் ஒருவரை உடனடியாக கைது செய்து அவருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என பொதுமக்கள் விடுத்துள்ள கோரிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சவுதியில் ரியாத் நகரில் Malak Al Shehri என்ற இளம்பெண் வசித்து வருகிறார்.
முற்போக்கு சிந்தனை கொண்ட இவர் இஸ்லாமிய பெண்கள் அனைவரும் முகத்திரை அணிந்துக்கொண்டு தான் வெளியே வர வேண்டும் என்ற கட்டுப்பாட்டை முழுமையாக எதிர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் ‘முகத்திரை அணியாமல் இப்போது நான் வெளியே சென்று ஹொட்டலில் உணவு சாப்பிட போகிறேன்’ என தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்து விட்டு சென்றுள்ளார்.
மேலும், அறிவித்தவாறு முகத்திரை எதுவும் அணியாமல் புகைப்படம் ஒன்றை எடுத்து டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
பெண்ணின் இச்செயல் தற்போது பெரும் சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது.
‘இஸ்லாமிய கொள்கைகளை மதிக்காத அப்பெண்ணை உடனடியாக கைது செய்து தலையை வெட்டி மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும்’ என சிலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
‘இஸ்லாமியத்தை அவமதிக்கும் இவரை வெட்டி நாய்களுக்கு இரையாக்க வேண்டும்’ என சிலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும் சிலர், டுவிட்டர் மூலமாக அப்பெண்ணிற்கு கொலை மிரட்டலும் விடுத்து வருகின்றனர்.
தன்னுடைய புகைப்படம் தனது உயிருக்கு எதிராக மாறியுள்ளதை கண்ட அப்பெண் புகைப்படத்தை நீக்கியது மட்டுமில்லாமல் தனது டுவிட்டர் கணக்கையும் அழித்துள்ளார்.
பெண்ணின் இச்செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருந்தாலும் பெண்கள் பலர் ஆதரவும் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
…..வெட்டுங்க சாக அடிங்க போங்கடா உலகமே உங்களை வெறுப்பதை அறியவில்லையா ?