தம்மால் உருவாக்கப்பட்ட பெர்மாத்தாவுக்கு ஒதுக்கப்படும் அரசாங்க நிதிகள் தவறாக பயன்படுத்தப்படுவதில்லை என்பதை ரோஸ்மா மன்சூர் வலியுறுத்தினார்.
“அரசாங்கத்திடமிருந்து வரும் பணம் எதுவும் என் கைப்பைக்குள் செல்வதில்லை என்பதை அழுத்தந்திருத்தமாக சொல்ல விரும்புகிறேன்”, என்று ரோஸ்மா கூறியதும் கூட்டத்தினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் துணைவியார், இன்று கோலாலும்பூரில் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றுக்கொண்டு உரையாற்றியபோது இவ்வாறு கூறினார். அவர் தொடங்கிய குழந்தைகளுக்கான இளமைக்கால கல்வித் திட்டத்துக்காக அவ்விருது வழங்கப்பட்டது.
பெர்மாத்தா தம் நெஞ்சுக்கு நிறைவு தரும் ஒரு திட்டம் என்றாரவர்.
“பெர்மாத்தா பற்றிப் பேசிக்கொண்டே இருக்கலாம். மாலைவரைகூட பேசலாம்.
“பெர்மாத்தா பற்றிச் சொல்வதற்கு என்னிடம் நிறைய இருக்கிறது. சில நேரங்களில், என் கணவர்கூட ‘தயை செய்து வாயையும் கண்ணையும் பொத்திக்கொள்கிறாயா, சற்று நேரம் ஓய்வெடுப்போம்’ என்பார்”, என்று ரோஸ்மா சொன்னதைக் கேட்டு கூட்டத்தினர் கலகலவெனச் சிரித்தனர்.
பெர்மாத்தாவுக்கான நிதி மொத்தமும் கருவூலத்தில்தான் இருக்கும். அதை எடுப்பதற்கென நடைமுறைகள் உண்டு என்றவர் தெரிவித்தார்.
ஆனால் அப்படியே பையில் போடாமல் முழுங்கி விடுவேன் இதுதான் கதை சும்மா ரீல் விடாதே பாப்பா MIC இடம் வேல்;பாரி …ரங்கிடம் சொல் அந்த மட சூனியங்கள் நம்பும் மக்கள் அல்ல
பெர்மாத்தா நிதி கைப்பைக்குச் செல்லாமல் .. கைப்பையாக மாறி விடுகிறதா ???