ஐரோப்பாவில் தாக்குதல் நடத்த ஐ.எஸ் பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் ஐ.எஸ் அமைப்புக்கு ஏற்பட்டு வரும் தோல்விக்கு பழி தீர்க்கும் வகையில் இவ்வாறு தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக ஐரோப்பாவுக்கான பாதுகாப்பு பிரிவு எச்சரித்துள்ளது.
தாக்குதல் மேற்கொள்வதற்காக வெளிநாட்டு பயங்கரவாதிகள் ஐரோப்பாவுக்குள் நுழைய ஆயத்தமாக உள்ளதாக ஐரோப்பா பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
மோட்டார் வாகன குண்டு மற்றும் நபர்கள் கடத்தல் போன்றவற்றை எதிர்பாரக்க முடியும் என பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
விசேடமாக அதிக முக்கியமான இடங்கள் மற்றும் நகரங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனூடாக ஐ.எஸ் தீவிரவாதிகள் இலகுவான இலக்கு நோக்கி சென்றுள்ளதாகவும், அவர்களில் அதிகமானோர் தனிமைப்படுத்தப்பட்டு தாக்குதல் மேற்கொள்ளலாம் என பாதுகாப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
அண்மையில் பிரான்ஸின் நீஸ் நகரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் போன்று மேலும் நடத்தப்படலாம் என எச்சரிக்கைப்பட்டுள்ளது.
இதேவேளை, சிரியாவில் இருந்து ஐரோப்பாவிற்கு வந்து குடியேறியுள்ளவர்கள் தீவிரவாத தாக்குதலில் ஈடுபடுவதற்காக வாய்ப்புகள் காணப்படுவதாக ஐரோப்பாவுக்கான பாதுகாப்பு பிரிவு எச்சரித்துள்ளது.
-http://www.tamilwin.com