யதார்த்தத்தில் ஈழத் தமிழருக்கான பாதையும் – பயணமும் ..! மு.திருநாவுக்கரசு

tamil“நாம் இப்போது எப்படி இருக்கிறோம், இனி எப்படி இருக்கவேண்டும்”: என்பதைப் பற்றியும் “இப்போது நாம் எங்கு நிற்கின்றோம், இனி எங்கு நிற்கவேண்டும்” என்பதைப் பற்றியும் சரியாக மதிப்பீடு செய்யாமல் முன்னேற்றத்தைப் பற்றிசிந்திக்க முடியாது.

அரை நூற்றாண்டுக்கு மேல் அரசியற் தலைவனாக இருந்த லீ குவான்-யூ 30 ஆண்டுக்கு மேல் சிங்கப்பூரின் பிரதமராகவும், 20 ஆண்டுகளாக மூத்த அமைச்சரவை உறுப்பினராகவும் இருந்த அனுபவம் கொண்டவர். இவர் 12 நூல்களை எழுதியுள்ளார்.

“நாம் எங்கு நிற்கின்றோம், நாம் எங்கு நிற்கவேண்டும்” என்பதை புரிந்துகொள்ள விரும்புவோர் படிக்க வேண்டிய நூல் என்று இவர் இறுதியாக 2013ஆம் ஆண்டு எழுதிய One Man’s View of the World என்ற நூலைப் பற்றி விதந்ததுரை உண்டு.

வலதுசாரிப் பாதையில் லீ குவான்-யூவும், இடதுசாரிப் பாதையில் பிடல் காஸ்ட்ரோவும் அரை நூற்றாண்டிற்கு குறையாத அரசியல் அனுபவம் கொண்ட இரு முதுபெரும் தலைவர்களாகஇருந்தவர்கள் மட்டுமன்றி மேற்படி தத்தமது அரசியற் பாதைகளில் வெற்றிகரமானதலைவர்களாகவும் இருந்துள்ளனர்.

இவர்களது அரசியற் ஆளுமை எத்தரப்பினரும் கற்றறிய வேண்டிய முக்கியத்துவத்திற்கு உரியவையாகும்.

இவர்கள் இருவரும் மிகவும் நெழிவு சுழிவான அரசியல் இராஜதந்திர நடைமுறைகளைக் கொண்டவர்களாய் விளங்கியுள்ளனர்.

கொள்கைவகுப்பில் ஈடுபடும் ஒருவரும், மக்களுக்கு தலைமை தாங்க முற்படும் ஒருவரும் 20ஆம் நூற்றாண்டின் மத்தியின் பின் தத்தம் பாதைகளில் ஈடு இணையற்ற அரசியல் இராஜதந்திர விற்பனர்களாகவும், திறமைவாய்ந்த ஆளுமை பண்பு கொண்ட தலைவர்களாகவும் இருந்துள்ளனர்.

யதார்த்தத்தை அதன் உட்பொருளுடன் அப்படியே சரிவர எடைபோட்டு அந்த யதார்த்தத்திற்குப் பொருத்தமான நடைமுறைக்கு சாத்தியமான தீர்மானங்களை எடுத்து அதைச் செயற்படுத்துவதில் லீ குவான்-யூ கைதேர்ந்த நிபுணத்துவம் மிக்கவர்.

இது இடதுசாரிப் பாதையில் பிடல் காஸ்ட்ரோவுக்கும் பொருந்தும். காணப்படும் வாய்ப்புக்களைப் பற்றிப் பிடித்து அதனை நடைமுறைப்படுத்தவல்ல செயலாற்றலில்தான் தலைமைத்துவத்தின் மேன்மை அல்லது ஒரு தலைவனின் மேன்மை அடங்கியுள்ளது.

இலட்சியம்-கொள்கை-கோட்பாடு-வழிமுறை-நடைமுறை இந்த ஐந்தையும் ஒன்றுடன் ஒன்று பொருந்தக்கூடிய வகையில் ஒருங்கிசைவானதும் முழுமைப்பட்டதுமான தீர்மானங்களைஎடுக்கும் போது மட்டும்தான் அது காலங்களையும் கடந்த தொடர் வெற்றிகளுக்கு இட்டுச் செல்லும்.

வெற்றியும் தோல்வியும் வாழ்விலும் வரலாற்றிலும் ஏற்படுவது இயல்பு. ஆனால் பின்வாங்க வேண்டிய இடங்களில் பின்வாங்காமலும், முன்னேற வேண்டிய இடங்களில் முன்னேறாமலும் ஒருவர் இருப்பாரேயானால் அவர் தன் கையில் உள்ள வெற்றிகளையும் எதிரியின் சட்டைப்பைக்குள் போட்டுவிடுவார்.

மதி நுட்பம் மிகுந்த எந்தொரு தீர்மானமும் செயல்களும் வெற்றிகளும் நேர்கோட்டில் அப்படியே நிகழ்ந்தது கிடையாது.

பின்வாங்கல்களுடனும், முன்னேற்றங்களுடனும் வளைந்தும் நெளிந்தும் தம் இலக்கை நோக்கி நகரக்கூடிய தீர்மானங்களும் செயல்களுமே வரலாற்றில் வெற்றிவாகை சூடவல்லவை.

வரலாறு இவைபற்றிய பாடங்களை ஏற்கனவே போதித்துள்ளது. ஒரு துறைமுக நகரமான சிங்கப்பூரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, முன்னுதாரணம் மிக்க துறைமுக நகர அரசாக வரலாற்றில் நிலைநாட்டுவதில் லீ குவான்-யூ மிகப் பெரும் வெற்றியை ஈட்டினார்.

அவர் தெளிவாக மேற்குலம் சார்ந்து தனக்கான வியூகத்தை வகுத்துக்கொண்டார். அதேவேளை சீனாவோடு நுணுக்கமான நல்லுறவை கொள்ள வேண்டும் என்பதிலும் கவனமாக இருந்தார்.

ஒரு முழுநீள வலதுசாரியான லீ குவான்-யூ அமெரிக்காவின் தொட்டிலில் தவழ்ந்த ஒரு செல்லப் பிள்ளையானாலும் கம்யூனிச சீனாவுடன் நல்லுறவை வைத்திருப்பதில் அல்லதுசீனாவின் கோபத்திற்கு ஆளாகாமல் இருப்பதில் அதிகம் நாட்டம் காட்டினார்.

சீனாவின் அனைத்து தலைவர்களையும் அவ்வப்போது அவர் சந்திக்கத் தவறவில்லை. மாசேதுங், டெங்ஸியாவோ பிங், ஸி ஜிபிங் ஆகிய மூன்று பெரும் சீனத் தலைவர்களையும் அவர் அவ்வப்போது சந்தித்து அவர்களுடனான நல்லுறவைப் பேணத் தவறவில்லை.

அதேவேளை நோட்டோவின் ஒரு தூணாக சிங்கப்பூர் துறைமுகத்தை ஆக்கவும் தவறவில்லை. இங்கு அவர் மேற்படி எந்தொரு அரசுகளுடனான உறவிலும் யதார்த்த நிலைமைக்குப் பொருத்தமான வளைவு நெளிவுகளை மேற்கொண்டு சிங்கப்பூரை அவர் முன்னேற்றவும் தவறவில்லை.

இவரது கொள்கையிலுள்ள நல்லது கெட்டது என்பதற்கு அப்பால் அவற்றை சரியாக கணிப்பீடு செய்து முன்னெடுத்து வெற்றி பெறுவதில் இவரது தலைமைத்துவப் பண்பும், அதற்கானஆளுமையும் தனிச்சிறப்பு வாய்ந்தவை.

தலைமைத்துவம், ஆளுமை ஆய்வு, கொள்கை வகுப்பு என்னும் விடயங்களில் லீ குவான்-யூ தவிர்க்கப்பட முடியாத பாடப்புத்தகமாவார்.

அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் நிறையவே உள்ளன. இவரது சமகாலத்தில் ஒரு சிறிய கியூபாத்தீவின் தலைவரான பிடல் காஸ்ரோ தனக்கென தனித்துவமான ஈடு இணையற்ற பல முன்னுதாரணங்களை வரலாற்றில் ஏற்படுத்தியுள்ளார்.

காஸ்ட்ரோ கியூபா புரட்சியை வெற்றிகரமாக நிறைவேற்றியதைவிடவும் பெரிய சாதனை அந்த வெற்றியை தக்கவைக்கும் வகையில் அவர் கையாண்ட பின்வரும் இருசம்பங்களுமாகும்.

1941ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி சிஐஏவின் முன்னெடுப்பின் மூலம் கியூபா மீது மேற்கொள்ளப்பட்ட படையெடுப்பை காஸ்ட்ரோ 3 நாட்களில் தோல்வியுறச் செய்தார்.

இதில் அவர் இராணுவ ரீதியான வெற்றியை ஈட்டினார் என்பதினாலும், இந்த படையெடுப்பிற்கு எதிராக அவர் நிகரற்ற தலைமைத்துவ திறமையை வெளிப்படுத்தினார் என்பதினாலும் கியூபாவின் ஈடு இணையற்ற பெரும் தலைவர் என்ற ஸ்தானத்தை பெற்றது மட்டுமன்றி சர்வதேச தலைவர்களின் தரத்திற்கும் தன்னை அவரால் உயர்த்த முடிந்தது.

அமெரிக்க ஜனாதிபதியாய் இருந்த டி. ஐஸ்ஸநோவர் கியூபாவிற்கு எதிரான கடும் நிலைப்பாட்டைக் கொண்டவராய் இருந்தார். கியூபாவுக்கு எதிரான யுத்தத்தை சிஐஏநடத்துவதற்கென அவர் 1960 மார்ச் மாதம் 13.1 பில்லியன் டாலர்களை ஒதுக்கீடு செய்தார்.

ஆனால் அவருக்குப் பின்பு பதவிக்கு வந்த ஜோன் எவ் கென்னடி ஜனாதிபதியாக இருக்கும் போதுதான் 1961 ஏப்ரல் 17ஆம் தேதி பே ஆப் பிக்ஸ் படையெடுப்பை (Bay of Pigs Invasion) கியூபா மீது அமெரிக்கா மேற்கொண்டது.

இதில் நாட்டைவிட்டு தப்பியோடிய கியூப வலதுசாரிகளை துணையாகக் கொண்டே இப்படையெடுப்பை அமெரிக்கா மேற்கொண்டது.

படையெடுப்பு தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அதில் சரணடைந்த கியூப வலதுசாரிகள் அனைவரும் சிறையிலிடப்பட்டனர்.

இந்த படையெடுப்பு கியூபாவின் மனதில் பெரும் காயத்தையும் அமெரிக்காவின் மனதில்தோல்வியின் ஆவேசத்தையும் பதித்தன. இதனைத் தொடர்ந்து அமெரிக்க கியூப உறவு பெரிதும் கொதிநிலையடைந்தது.

இப்பின்னணயிற்தான் உலகை உலுக்கிய அணுவாயுத யுத்த அச்சத்தை ஏற்படுத்திய கியூப ஏவுகணை நெருக்கடி (Cuban Missile Crisis) 1962ஆம் ஆண்டு நிகழ்ந்தது.

இங்குதான் காஸ்ட்ரோவின் இராஜதந்திர மதிநுட்பமும், அதன் அடிப்படையிலான அரசியல் வெற்றியும் வரலாற்றில் தனிச்சிறப்பு மிக்க அத்தியாயமாய் வடிவம் பெற்றது.

அதாவது அமெரிக்காவின் படையெடுப்பிலிருந்து கியூபாவைப் பாதுகாப்பதற்கு ஏற்றவகையில் கியூபாவை அணுவாயுதம் தரித்த நாடாக காஸ்ட்ரோ திட்டமிட்டார்.

அதேவேளை சோவியத் ரஷ்யாவின் அதிபராக இருந்த நிக்கிலா குருட்ஷேவ் கியூபாவை பயன்படுத்தி ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்காவின் ஏவுகணை முற்றுகையை எதிர்கொள்ள திட்டமிட்டார்.

இத்தாலி, துருக்கி ஆகிய இருநாடுகளிலும் ரஷ்யாவை நோக்கி அமெரிக்க அணுவாயுதம் தாங்கிய ஏவுகணைகள் நிறுத்தப்பட்டிருந்தன.

அமெரிக்காவின் இந்த ஏவுகணை அச்சுறுத்தலில் இருந்து ரஷ்யாவை பாதுகாக்க கியூபாவை ஒரு களமாக்கலாம் என்ற முடிவுக்கு குருஷேவ் வந்தார். இதன் அடிப்படையில் குருஷேவ், காஸ்ட்ரோகியூபாவில் அணுவாயுத ஏவுகணைகளை நிலைநிறுத்துவதான இரகசிய ஒப்பந்தத்தத்தை மேற்கொண்டனர்.

இதன்படி கியூபாவில் ரஷ்யாவின் அணுவாயு ஏவுகணைகளை நிலைநிறுத்துவதற்கான பணிகள் ஆரம்பமாயின. இதனை சிஐஏயின் வேவு விமானங்கள் தெளிவாக படம் பிடித்து சர்வதேச அரங்கில் முன்வைத்து அணுவாயுத யுத்தத்தின் விளிம்பிக்கிற்கு அமெரிக்காவும் ரஷ்யாவும் போயின.

கியூபாவிற்கு எதிரான இராணுவ முற்றுகைக்கு அமெரிக்க ஜனாதிபதி கென்னடி கட்டளையிட்டார். இப்பிரச்சினையை குருஷேவும் – காஸ்;;;;;;;;;ட்ரோவும் தங்கள் தங்கள் தேவைகளுக்கு பொருத்தமாக கையாளத் தீர்மானித்தனர்.

அமெரிக்காவிடம் பின்வரும் நிபந்தனைகளை மேற்படி இருவரும் முன்வைத்தனர். முதலாவதாக ஒருபோதும் கியூபாவின் மீது அமெரிக்கா படையெடுப்பை மேற்கொள்ள மாட்டாது என்று உறுதியளிக்கப்பட வேண்டும்.

அதற்கு அமெரிக்கா ஒப்புக்கொண்டது. அடுத்து இத்தாலியிலும், துருக்கியிலும் ரஷ்யாவிற்கு எதிராக நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க ஏவுகணைகளை விலக்கிக் கொள்ள வேண்டும். இந்த இரண்டாவது நிபந்தனை அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையேயான இரகசிய உடன்பாடாகவே இருந்தது.

அதனை அமெரிக்கா நிறைவேற்றியது. அதேபோல கியூபாவில் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்காவிற்கு எதிரான அணுவாயுத ஏவுகணை நடவடிக்கைகளை ரஷ்யா திரும்ப பெற்றுக் கொண்டதுடன் கியூபாவிற்கு வழங்கப்பட்டிருந்த தாக்குதல் விமானங்களையும் ரஷ்யா திரும்ப பெற்றுக் கொண்டது.

இந்த ஏவுகணை நெருக்கடியை கையாண்ட விதத்தின் மூலம் காஸ்ட்ரோ நிரந்திரமாக அமெரிக்காவிடமிருந்து கியூபாவை பாதுகாத்துக் கொண்டார்.

அவர் ஏவுகணைத் திட்டத்தை முன்னெடுத்ததும், கைவிட்டதும் அவரது அரசியல் இராஜதந்திர வெற்றிக்கான ஒரு நாணயத்தின் இருபக்கங்களாகும்.

இங்கு ஏவுகணைத் திட்டத்தை கைவிட மாட்டேன் என்று காஸ்ட்ரோ பிடிவாதம் பிடிக்கவும் இல்லை. அதேவேளை அவர் வீம்புக்கு ஏவுகணைத் திட்டத்தை ஆரம்பிக்கவும் இல்லை.

கியூபாவின் பாதுகாப்பிற்கு பொருத்தமான முறையில் அந்த திட்டத்தை தேவையான நேரத்தில், தேவையான அளவில் முன்னெடுத்து தன் தேவைக்கு பொருத்தமான இடத்தில் விலகிக்கொண்டார்.

அதன்மூலம் அவர் வரலாற்றில் நிகரற்ற வெற்றிகளைப் பெற்றார். அவர் கியூபாவில் புரட்சியை நிறைவேற்றிய வெற்றியைவிட அவரை சர்வதேச தலைவர்களுள் ஒருவராக ஆக்கியது இந்த ஏவுகணை விவகாரத்தை அவர் கையாண்டவிதமாகும்.

இங்கு உண்மையான அர்த்தத்தில் அது பின்வாங்கலாக அமையவில்லை. மாறாக கியூபாவின் வெற்றிக்கான ஒரு துருப்புச் சீட்டாக அதனை மிகச் சாதூர்யமாக செயற்படுத்தினார்.

அதேவேளை வெளிப்படையான அர்த்தத்தில் பின்வாங்கி பெரு வெற்றி ஈட்டியதற்குரிய ஒரு நல்ல வரலாற்று உதாரணமாக 1918ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ஆம் தேதி கையெழுத்தான பிரைஸ்ட் – லிட்டோஸ்க் உடன்படிக்கை (Treaty of Brest – Litovsk) காணப்படுகிறது.

லெனின் தலைமையில் ரஷ்ய புரட்சி வெற்றி பெற்று அரையாண்டுகூட பூர்த்தியாகவில்லை. முதலாம் உலக மகாயுத்தத்தில் இருந்து ரஷ்யா வெளியேறும் என்றும் மக்களுக்கு அமைதியை புரட்சி தரும் என்றும் புரட்சிக் காலகட்டத்தில் லெனின் ரஷ்ய மக்களுக்கு வாக்குறுதியளித்தார்.

இதன்படி புரட்சி முடிந்ததும் ரஷ்யா யுத்தத்திலிருந்து வெளியேறியது. அப்போது ஜெர்மன் தலைமையிலான மத்திய வல்லரசுகள் ரஷ்யாவின் மீது ஆக்கிரமிப்பு யுத்தத்தை மேற்கொள்ள தீர்மானித்தன.

அதாவது ஜார் மன்னனுக்கும் மேற்படி மத்திய வல்லரசுகளுக்கும் இடையே செய்யப்பட்ட யுத்த ஒப்பந்தத்திலிருந்து சோசலிச ரஷ்யா வெளியேறக்கூடாது என்றும் அப்படி வெளியேறினால் ரஷ்யாவிற்கு எதிராக யுத்தமே பதிலென்றும் மேற்படி வல்லரசுகள் நிலைப்பாட்டை எடுத்தன.

ரஷ்யா மீது யுத்தம் திணிக்கப்பட்டது. ஆனால் லெனின் யுத்தத்தை முற்றிலும் தவிர்க்க விரும்பினார்.

அதற்குப் பதிலாக ரஷ்யாவின் பால்கன் அரசுகளையும் வேறு சில ரஷ்ய பகுதிகளையும் ஜெர்மனியிடம் ரஷ்யா ஒப்படைக்க வேண்டுமென்றும் அப்படி இன்னும் சில பகுதிகளை ஓட்டமன் பேரரசிடம் ஒப்படைக்க வேண்டுமென்றும் மற்றும் பணமும் கோரின.

இதற்கு ரஷ்யாவின் ஆளும் தரப்பில் ஆதரவு இருக்கவில்லை. கூடவே ட்ராஸ்கியும் இதனை எதிர்த்தார்.

ஆனால் லெனின் கொள்ளைக்காரனிடம் பணப் பெட்டியை ஒப்படைத்து உயிரைக் காப்பது போல ரஷ்யாவின் ஒரு நிலப்பரப்பையேனும் இழந்து சோசலிசப் புரட்சியை ரஷ்யாவில் பாதுகாக்க வேண்டுமென்றும், தாய் மண்ணை எதிரியிடம் தாரைவார்கிறோம் என்ற வெறும் தூய்மைவாதம் இங்கு வேண்டாம் என்றும் வாதிட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் தயாராகி அதற்காக ட்ராஸ்கியைப் பணித்தார்.

ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் போது பாராம்பரிய ஆடையணிந்தவாறுதான்; கையெழுத்திட வேண்டுமேதவிர புரட்சியாளன் ஆடையிலல்ல என்று ஜெர்மனி நிபந்தனை விதித்தது.

இந்த நிபந்தனையை ட்ராஸ்கி ஏற்க மறுத்தார். அப்போது லெனின் பின்வருமாறு கூறினார். பெண்கள் அணியும் உள்ளாடையை அணிந்தவாறு கையெழுத்திடுமாறு வற்புறுத்தினாலும் அதற்கும் பணிந்து கையெழுத்திடுவோம்.

இப்போது எமது பணி புரட்சியை பாதுகாப்பதேதவிர ஆடை பிரச்சனையல்ல என்றவாறு சீற்றத்துடன் தன் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி கொள்ளைக்காரத்தனமான அந்த ஒப்பந்தத்தில் ரஷ்யா கையெழுத்திட்டது.

இறுதியாக முதலாம் உலக மகாயுத்தத்தில் ஜெர்மனி தோல்வியடைந்ததும் நவம்பர் 1918ஆம் ஆண்டு ரஷ்யா 8 மாதங்களுக்கு முன்னிழந்த ரஷ்ய நிலப்பரப்பு அனைத்து ரஷ்ய வசமானது. லெனின் தீர்க்கதரிசனமும் எதனை இழந்து எதனை பாதுகாக்க வேண்டும் என்ற விவேகமும் வரலாற்று அத்தியாயத்தில் வெற்றிகளாய் பதிந்தன.

இங்கு ஒரு தெளிவான பின்வாங்கலை, ஒருவகை சரணாகதியை லெனின் மேற்கொண்டார். ஆனால் அவையே அவரது அரும்பெரும் புரட்சியை பாதுகாக்க உதவின. வரலாறு இப்படி பாடங்களை போதிக்கத் தவறவில்லை.

ஈழத்தமிழர்கள் தமது உரிமைகளை நிலைநாட்டுவதற்கான போராட்டத்தில்; வெற்றிபெற வேண்டுமென்றால் அதற்குப் பொருத்தமான இராஜதந்திர ரீதியிலான வெளியுறவுக் கொள்கையை வகுக்கவும், பின்பற்றவும் வேண்டும்.

இதற்கு மேற்படி மூன்று தலைவர்களினது இராஜதந்திர செயற்பாடுகள் எமக்கான சிறந்த முன்னுதாரணங்களாகும். இப்படிப்பட்ட நிலைப்பாடுகளை நாங்கள் பண்டைய வரலாறுகளிற்கூட காணலாம். அதற்கு ஓர் உதாரணமாக ஏதென்ஸ்-ஸ்பார்ட்டா அரசுகளுக்கிடையேயான உறவுகளை அவதானிக்கலாம்.

அதாவது இருநகர அரசுகளும் தமக்கிடையே இடையறாது மோதி வந்தன. ஆனால் கிமு 490ஆம் ஆண்டு பாரசீகம் கிரேக்கத்தின் மீது படையெடுத்த போது மேற்படி இரு நகர அரசுகளும் தமக்கிடையே நட்புறவு ஒப்பந்தத்தை மேற்கொண்டன.

இப்படி வரலாறு பல பாடங்களை எம்மிடம் முன்வைத்திருக்கிறது. 30 ஆண்டுகால யுத்த பூமியில் ஈழத் தமிழ் மக்கள் பெரும் புயல் சூழ்ந்த, கொதிநிலைமிக்க, கொந்தளிப்பான தமது பயணத்தின் இறுதியில் திசை தெரியாது தரைதட்டி நிற்கின்றனர்.

ஓளிக்கீற்றைக் காணாமல் கருங்கடலில் காரிருளில் பயணிக்க முடியாது. கலங்கரைவிளக்கம் இன்றியும், எக்காளத்தொனியின்றியும் பயணிக்க முடியாது.

இப்போது தேவைப்படும் ஒளிக்கீற்றையும், கலங்கரைவிளக்கத்தையும், எக்காளத்தொனியையும் வழங்கவல்ல நடவடிக்கைகளில் ஈழத் தமிழ் அறிஞர்களும், கலை-இலக்கிய படைப்பாளிகளும் ஈடுபட வேண்டியது முதற்கண் அவசியம்.

“சிந்தனையாளர்களும், படைப்பிலக்கிய கர்த்தாக்களும் ஒரு தேசத்திற்கான உள்ளுணர்வையும் கூடவே அத்தேசத்திற்கான ஆன்மாவையும் ஊட்டவல்லவர்கள்” என்ற கூற்று இங்கு நினைவுபடுத்தத்தக்கது.

இன்றைய நிலையில் ஈழத் தமிழ் மக்களுக்கு தேவைப்படுவது தமிழ்த் தேசிய மறுசீரமைப்பும், அதற்கான புதிய சிந்தனையுமாகும். சட்டை அணியவேண்டியது இலட்சியம் என்பதற்காக 3 வயதிற்குரிய சட்டையை 30 வயதில் அணியமுடியாது.

அதேபோல 30 வயதிற்குரிய சட்டையை 3 வயதில் அணியமுடியாது. எது பொருத்தமோ அதுவே சரியானது. இதனை மேற்படி வரலாற்று உதாரணங்கள் அனைத்தும் நிரூபித்து நிற்கின்றன.

ஆகவே யதார்த்தத்திற்குப் பொருத்தமாகவும், சர்வதேச நிலைமைகளுக்கும், சவால்களுக்கும் ஈடுகொடுக்கக்கூடிய வகையிலும் தமிழ்த் தேசியம் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதை முதலில் உணரவேண்டியது அவசியம்.

அதனை உணர்ந்து ஏற்று அத்தகைய மறுசீரமைப்புப் பணியில் ஈடுபடாதுவிட்டால் தமிழ்த் தேசிய இனத்தை காப்பாற்ற முடியாத அவலம் ஏற்படும்.

இங்கு யதார்த்தத்தை சரிவர கருத்தில் எடுத்து அதற்குப் பொருத்தமாக பாதையை வகுத்து பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.

இதற்கான ஒளியையும், வழியையும் ஏற்படுத்துவதில் தமிழ் அறிஞர்களுக்கும், கலை-இலக்கிய படைப்பாளிகளுக்குமான பங்கு தலையாயது “நாம் இப்போது எப்படி இருக்கிறோம், இனி எப்படி இருக்கவேண்டும்”: என்பதைப் பற்றியும் “இப்போது நாம் எங்கு நிற்கின்றோம், இனி எங்கு நிற்கவேண்டும்”

என்பதைப் பற்றியும் சரியாக மதிப்பீடு செய்யாமல் முன்னேற்றத்தைப் பற்றி சிந்திக்க முடியாது.

அரை நூற்றாண்டுக்கு மேல் அரசியற் தலைவனாக இருந்த லீ குவான்-யூ 30 ஆண்டுக்கு மேல் சிங்கப்பூரின் பிரதமராகவும், 20 ஆண்டுகளாக மூத்த அமைச்சரவை உறுப்பினராகவும் இருந்த அனுபவம் கொண்டவர். இவர் 12 நூல்களை எழுதியுள்ளார்.

“நாம் எங்கு நிற்கின்றோம், நாம் எங்கு நிற்கவேண்டும்” என்பதை புரிந்துகொள்ள விரும்புவோர் படிக்க வேண்டிய நூல் என்று இவர் இறுதியாக 2013ஆம் ஆண்டு எழுதிய One Man’s View of the World என்ற நூலைப் பற்றி விதந்ததுரை உண்டு.

வலதுசாரிப் பாதையில் லீ குவான்-யூவும், இடதுசாரிப் பாதையில் பிடல் காஸ்ட்ரோவும் அரை நூற்றாண்டிற்கு குறையாத அரசியல் அனுபவம் கொண்ட இரு முதுபெரும் தலைவர்களாகஇருந்தவர்கள் மட்டுமன்றி மேற்படி தத்தமது அரசியற் பாதைகளில் வெற்றிகரமானதலைவர்களாகவும் இருந்துள்ளனர்.

இவர்களது அரசியற் ஆளுமை எத்தரப்பினரும் கற்றறிய வேண்டிய முக்கியத்துவத்திற்கு உரியவையாகும்.

இவர்கள் இருவரும் மிகவும் நெழிவு சுழிவான அரசியல் இராஜதந்திர நடைமுறைகளைக் கொண்டவர்களாய் விளங்கியுள்ளனர்.

கொள்கைவகுப்பில் ஈடுபடும் ஒருவரும், மக்களுக்கு தலைமை தாங்க முற்படும் ஒருவரும் 20ஆம் நூற்றாண்டின் மத்தியின் பின் தத்தம் பாதைகளில் ஈடு இணையற்ற அரசியல் இராஜதந்திர விற்பனர்களாகவும், திறமைவாய்ந்த ஆளுமை பண்பு கொண்ட தலைவர்களாகவும் இருந்துள்ளனர்.

யதார்த்தத்தை அதன் உட்பொருளுடன் அப்படியே சரிவர எடைபோட்டு அந்த யதார்த்தத்திற்குப் பொருத்தமான நடைமுறைக்கு சாத்தியமான தீர்மானங்களை எடுத்து அதைச் செயற்படுத்துவதில் லீ குவான்-யூ கைதேர்ந்த நிபுணத்துவம் மிக்கவர்.

இது இடதுசாரிப் பாதையில் பிடல் காஸ்ட்ரோவுக்கும் பொருந்தும். காணப்படும் வாய்ப்புக்களைப் பற்றிப் பிடித்து அதனை நடைமுறைப்படுத்தவல்ல செயலாற்றலில்தான் தலைமைத்துவத்தின் மேன்மை அல்லது ஒரு தலைவனின் மேன்மை அடங்கியுள்ளது.

இலட்சியம்-கொள்கை-கோட்பாடு-வழிமுறை-நடைமுறை இந்த ஐந்தையும் ஒன்றுடன் ஒன்று பொருந்தக்கூடிய வகையில் ஒருங்கிசைவானதும் முழுமைப்பட்டதுமான தீர்மானங்களைஎடுக்கும் போது மட்டும்தான் அது காலங்களையும் கடந்த தொடர் வெற்றிகளுக்கு இட்டுச் செல்லும்.

வெற்றியும் தோல்வியும் வாழ்விலும் வரலாற்றிலும் ஏற்படுவது இயல்பு. ஆனால் பின்வாங்க வேண்டிய இடங்களில் பின்வாங்காமலும், முன்னேற வேண்டிய இடங்களில் முன்னேறாமலும் ஒருவர் இருப்பாரேயானால் அவர் தன் கையில் உள்ள வெற்றிகளையும் எதிரியின் சட்டைப்பைக்குள் போட்டுவிடுவார்.

மதி நுட்பம் மிகுந்த எந்தொரு தீர்மானமும் செயல்களும் வெற்றிகளும் நேர்கோட்டில் அப்படியே நிகழ்ந்தது கிடையாது. பின்வாங்கல்களுடனும், முன்னேற்றங்களுடனும் வளைந்தும் நெளிந்தும் தம் இலக்கை நோக்கி நகரக்கூடிய தீர்மானங்களும் செயல்களுமே வரலாற்றில் வெற்றிவாகை சூடவல்லவை.

வரலாறு இவைபற்றிய பாடங்களை ஏற்கனவே போதித்துள்ளது. ஒரு துறைமுக நகரமான சிங்கப்பூரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, முன்னுதாரணம் மிக்க துறைமுக நகர அரசாக வரலாற்றில் நிலைநாட்டுவதில் லீ குவான்-யூ மிகப் பெரும் வெற்றியை ஈட்டினார்.

பனிப் போர் சூழலில் சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவிற்கும் கூடவே சீனாவிற்கும் இடையே காணப்பட்ட முரண்பாடுகளை தனக்கு சாதகமாக்கி அதில் தனக்கு மிகவும் வாய்ப்பானவற்றை முதன்மைப்படுத்தி அதனடிப்படையில் தீர்மானங்களை எடுத்து சிங்கப்பூரை ஒரு முன்மாதிரியான துறைமுக நகர அரசாக லீ குவான்-யூ வடிவமைத்தார்.

அவர் தெளிவாக மேற்குலம் சார்ந்து தனக்கான வியூகத்தை வகுத்துக்கொண்டார். அதேவேளை சீனாவோடு நுணுக்கமான நல்லுறவை கொள்ள வேண்டும் என்பதிலும் கவனமாக இருந்தார்.

ஒரு முழுநீள வலதுசாரியான லீ குவான்-யூ அமெரிக்காவின் தொட்டிலில் தவழ்ந்த ஒரு செல்லப் பிள்ளையானாலும் கம்யூனிச சீனாவுடன் நல்லுறவை வைத்திருப்பதில் அல்லது சீனாவின் கோபத்திற்கு ஆளாகாமல் இருப்பதில் அதிகம் நாட்டம் காட்டினார்.

சீனாவின் அனைத்து தலைவர்களையும் அவ்வப்போது அவர் சந்திக்கத் தவறவில்லை. மாசேதுங், டெங்ஸியாவோ பிங்,

ஸி ஜிபிங் ஆகிய மூன்று பெரும் சீனத் தலைவர்களையும் அவர் அவ்வப்போது சந்தித்து அவர்களுடனான நல்லுறவைப் பேணத் தவறவில்லை.

அதேவேளை நோட்டோவின் ஒரு தூணாக சிங்கப்பூர் துறைமுகத்தை ஆக்கவும் தவறவில்லை. இங்கு அவர் மேற்படி எந்தொரு அரசுகளுடனான உறவிலும் யதார்த்த நிலைமைக்குப் பொருத்தமான வளைவு நெளிவுகளை மேற்கொண்டு சிங்கப்பூரை அவர் முன்னேற்றவும் தவறவில்லை.

இவரது கொள்கையிலுள்ள நல்லது கெட்டது என்பதற்கு அப்பால் அவற்றை சரியாக கணிப்பீடு செய்து முன்னெடுத்து வெற்றி பெறுவதில் இவரது தலைமைத்துவப் பண்பும், அதற்கானஆளுமையும் தனிச்சிறப்பு வாய்ந்தவை.

தலைமைத்துவம், ஆளுமை ஆய்வு, கொள்கை வகுப்பு என்னும் விடயங்களில் லீ குவான்-யூ தவிர்க்கப்பட முடியாத பாடப்புத்தகமாவார்.

அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் நிறையவே உள்ளன. இவரது சமகாலத்தில் ஒரு சிறிய கியூபாத்தீவின் தலைவரான பிடல் காஸ்ரோ தனக்கென தனித்துவமான ஈடு இணையற்ற பல முன்னுதாரணங்களை வரலாற்றில் ஏற்படுத்தியுள்ளார்.

காஸ்ட்ரோ கியூபா புரட்சியை வெற்றிகரமாக நிறைவேற்றியதைவிடவும் பெரிய சாதனை அந்தவெற்றியை தக்கவைக்கும் வகையில் அவர் கையாண்ட பின்வரும் இருசம்பங்களுமாகும்.

1941ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி சிஐஏவின் முன்னெடுப்பின் மூலம் கியூபா மீது மேற்கொள்ளப்பட்ட படையெடுப்பை காஸ்ட்ரோ 3 நாட்களில் தோல்வியுறச் செய்தார்.

இதில் அவர் இராணுவ ரீதியான வெற்றியை ஈட்டினார் என்பதினாலும், இந்த படையெடுப்பிற்கு எதிராக அவர் நிகரற்ற தலைமைத்துவ திறமையை வெளிப்படுத்தினார் என்பதினாலும் கியூபாவின் ஈடு இணையற்ற பெரும் தலைவர் என்ற ஸ்தானத்தை பெற்றது மட்டுமன்றி சர்வதேச தலைவர்களின் தரத்திற்கும் தன்னை அவரால் உயர்த்த முடிந்தது. அமெரிக்க ஜனாதிபதியாய் இருந்த டி. ஐஸ்ஸநோவர் கியூபாவிற்கு எதிரான கடும் நிலைப்பாட்டைக் கொண்டவராய் இருந்தார்.

கியூபாவுக்கு எதிரான யுத்தத்தை சிஐஏ நடத்துவதற்கென அவர் 1960 மார்ச் மாதம் 13.1 பில்லியன் டாலர்களை ஒதுக்கீடு செய்தார். ஆனால் அவருக்குப் பின்பு பதவிக்கு வந்த ஜோன் எவ் கென்னடி ஜனாதிபதியாக இருக்கும் போதுதான் 1961 ஏப்ரல் 17ஆம் தேதி பே ஆப் பிக்ஸ் படையெடுப்பை (Bay ofPigs Invasion) கியூபா மீது அமெரிக்கா மேற்கொண்டது.

இதில் நாட்டைவிட்டு தப்பியோடிய கியூப வலதுசாரிகளை துணையாகக் கொண்டே இப்படையெடுப்பை அமெரிக்கா மேற்கொண்டது.

படையெடுப்பு தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அதில் சரணடைந்த கியூப வலதுசாரிகள் அனைவரும் சிறையிலிடப்பட்டனர்.

இந்த படையெடுப்பு கியூபாவின் மனதில் பெரும் காயத்தையும் அமெரிக்காவின் மனதில்தோல்வியின் ஆவேசத்தையும் பதித்தன. இதனைத் தொடர்ந்து அமெரிக்க கியூப உறவு பெரிதும் கொதிநிலையடைந்தது.

இப்பின்னணயிற்தான் உலகை உலுக்கிய அணுவாயுத யுத்த அச்சத்தை ஏற்படுத்திய கியூப ஏவுகணை நெருக்கடி (Cuban Missile Crisis) 1962ஆம் ஆண்டு நிகழ்ந்தது.

இங்குதான் காஸ்ட்ரோவின் இராஜதந்திர மதிநுட்பமும், அதன் அடிப்படையிலான அரசியல் வெற்றியும் வரலாற்றில் தனிச்சிறப்பு மிக்க அத்தியாயமாய் வடிவம் பெற்றது.

அதாவது அமெரிக்காவின் படையெடுப்பிலிருந்து கியூபாவைப் பாதுகாப்பதற்கு ஏற்றவகையில் கியூபாவை அணுவாயுதம் தரித்த நாடாக காஸ்ட்ரோ திட்டமிட்டார்.

அதேவேளை சோவியத் ரஷ்யாவின் அதிபராக இருந்த நிக்கிலா குருட்ஷேவ் கியூபாவை பயன்படுத்தி ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்காவின் ஏவுகணை முற்றுகையை எதிர்கொள்ள திட்டமிட்டார்.

இத்தாலி, துருக்கி ஆகிய இருநாடுகளிலும் ரஷ்யாவை நோக்கி அமெரிக்க அணுவாயுதம் தாங்கிய ஏவுகணைகள் நிறுத்தப்பட்டிருந்தன.

அமெரிக்காவின் இந்த ஏவுகணை அச்சுறுத்தலில் இருந்து ரஷ்யாவை பாதுகாக்க கியூபாவை ஒரு களமாக்கலாம் என்ற முடிவுக்கு குருஷேவ் வந்தார். இதன் அடிப்படையில் குருஷேவ், காஸ்ட்ரோகியூபாவில் அணுவாயுத ஏவுகணைகளை நிலைநிறுத்துவதான இரகசிய ஒப்பந்தத்தத்தை மேற்கொண்டனர்.

இதன்படி கியூபாவில் ரஷ்யாவின் அணுவாயு ஏவுகணைகளை நிலைநிறுத்துவதற்கான பணிகள் ஆரம்பமாயின. இதனை சிஐஏயின் வேவு விமானங்கள் தெளிவாக படம் பிடித்து சர்வதேச அரங்கில் முன்வைத்து அணுவாயுத யுத்தத்தின் விளிம்பிக்கிற்கு அமெரிக்காவும் ரஷ்யாவும் போயின.

கியூபாவிற்கு எதிரான இராணுவ முற்றுகைக்கு அமெரிக்க ஜனாதிபதி கென்னடி கட்டளையிட்டார். இப்பிரச்சினையை குருஷேவும் – காஸ்;;;;;;;;;ட்ரோவும் தங்கள் தங்கள் தேவைகளுக்கு பொருத்தமாக கையாளத் தீர்மானித்தனர்.

அமெரிக்காவிடம் பின்வரும் நிபந்தனைகளை மேற்படி இருவரும் முன்வைத்தனர். முதலாவதாக ஒருபோதும் கியூபாவின் மீது அமெரிக்கா படையெடுப்பை மேற்கொள்ள மாட்டாது என்று உறுதியளிக்கப்பட வேண்டும்.

அதற்கு அமெரிக்கா ஒப்புக்கொண்டது. அடுத்து இத்தாலியிலும், துருக்கியிலும் ரஷ்யாவிற்கு எதிராக நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க ஏவுகணைகளை விலக்கிக் கொள்ள வேண்டும். இந்த இரண்டாவது நிபந்தனை அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையேயான இரகசிய உடன்பாடாகவே இருந்தது.

அதனை அமெரிக்கா நிறைவேற்றியது. அதேபோல கியூபாவில் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்காவிற்கு எதிரான அணுவாயுத ஏவுகணை நடவடிக்கைகளை ரஷ்யா திரும்ப பெற்றுக் கொண்டதுடன் கியூபாவிற்கு வழங்கப்பட்டிருந்த தாக்குதல் விமானங்களையும் ரஷ்யா திரும்ப பெற்றுக் கொண்டது.

இந்த ஏவுகணை நெருக்கடியை கையாண்ட விதத்தின் மூலம் காஸ்ட்ரோ நிரந்திரமாக அமெரிக்காவிடமிருந்து கியூபாவை பாதுகாத்துக் கொண்டார்.

அவர் ஏவுகணைத் திட்டத்தை முன்னெடுத்ததும், கைவிட்டதும் அவரது அரசியல் இராஜதந்திர வெற்றிக்கான ஒரு நாணயத்தின் இருபக்கங்களாகும்.

இங்கு ஏவுகணைத் திட்டத்தை கைவிட மாட்டேன் என்று காஸ்ட்ரோ பிடிவாதம் பிடிக்கவும் இல்லை. அதேவேளை அவர் வீம்புக்கு ஏவுகணைத் திட்டத்தை ஆரம்பிக்கவும் இல்லை.

கியூபாவின் பாதுகாப்பிற்கு பொருத்தமான முறையில் அந்த திட்டத்தை தேவையான நேரத்தில், தேவையான அளவில் முன்னெடுத்து தன் தேவைக்கு பொருத்தமான இடத்தில் விலகிக்கொண்டார்.

அதன்மூலம் அவர் வரலாற்றில் நிகரற்ற வெற்றிகளைப் பெற்றார். அவர் கியூபாவில் புரட்சியை நிறைவேற்றிய வெற்றியைவிட அவரை சர்வதேச தலைவர்களுள் ஒருவராக ஆக்கியது இந்த ஏவுகணை விவகாரத்தை அவர் கையாண்டவிதமாகும்.

இங்கு உண்மையான அர்த்தத்தில் அது பின்வாங்கலாக அமையவில்லை. மாறாக கியூபாவின் வெற்றிக்கான ஒரு துருப்புச் சீட்டாக அதனை மிகச் சாதூர்யமாக செயற்படுத்தினார்.

அதேவேளை வெளிப்படையான அர்த்தத்தில் பின்வாங்கி பெரு வெற்றி ஈட்டியதற்குரிய ஒரு நல்ல வரலாற்று உதாரணமாக 1918ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ஆம் தேதி கையெழுத்தான பிரைஸ்ட் – லிட்டோஸ்க் உடன்படிக்கை (Treaty of Brest – Litovsk) காணப்படுகிறது.

லெனின் தலைமையில் ரஷ்ய புரட்சி வெற்றி பெற்று அரையாண்டுகூட பூர்த்தியாகவில்லை. முதலாம் உலக மகாயுத்தத்தில் இருந்து ரஷ்யா வெளியேறும் என்றும் மக்களுக்கு அமைதியை புரட்சி தரும் என்றும் புரட்சிக் காலகட்டத்தில் லெனின் ரஷ்ய மக்களுக்கு வாக்குறுதியளித்தார்.

இதன்படி புரட்சி முடிந்ததும் ரஷ்யா யுத்தத்திலிருந்து வெளியேறியது. அப்போது ஜெர்மன் தலைமையிலான மத்திய வல்லரசுகள் ரஷ்யாவின் மீது ஆக்கிரமிப்பு யுத்தத்தை மேற்கொள்ள தீர்மானித்தன.

அதாவது ஜார் மன்னனுக்கும் மேற்படி மத்திய வல்லரசுகளுக்கும் இடையே செய்யப்பட்ட யுத்த ஒப்பந்தத்திலிருந்து சோசலிச ரஷ்யா வெளியேறக்கூடாது என்றும் அப்படி வெளியேறினால் ரஷ்யாவிற்கு எதிராக யுத்தமே பதிலென்றும் மேற்படி வல்லரசுகள் நிலைப்பாட்டை எடுத்தன.

ரஷ்யா மீது யுத்தம் திணிக்கப்பட்டது. ஆனால் லெனின் யுத்தத்தை முற்றிலும் தவிர்க்க விரும்பினார். அதற்குப் பதிலாக ரஷ்யாவின் பால்கன் அரசுகளையும் வேறு சில ரஷ்ய பகுதிகளையும் ஜெர்மனியிடம் ரஷ்யா ஒப்படைக்க

வேண்டுமென்றும் அப்படி இன்னும் சில பகுதிகளை ஓட்டமன் பேரரசிடம் ஒப்படைக்க வேண்டுமென்றும் மற்றும் பணமும் கோரின. இதற்கு ரஷ்யாவின் ஆளும் தரப்பில் ஆதரவு இருக்கவில்லை. கூடவே ட்ராஸ்கியும் இதனை எதிர்த்தார்.

ஆனால் லெனின் கொள்ளைக்காரனிடம் பணப் பெட்டியை ஒப்படைத்து உயிரைக் காப்பது போல ரஷ்யாவின் ஒரு நிலப்பரப்பையேனும் இழந்து சோசலிசப் புரட்சியை ரஷ்யாவில் பாதுகாக்க வேண்டுமென்றும், தாய் மண்ணை எதிரியிடம் தாரைவார்கிறோம் என்ற வெறும் தூய்மைவாதம் இங்கு வேண்டாம் என்றும் வாதிட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் தயாராகி அதற்காக ட்ராஸ்கியைப் பணித்தார்.

ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் போது பாராம்பரிய ஆடையணிந்தவாறுதான்; கையெழுத்திட வேண்டுமேதவிர புரட்சியாளன் ஆடையிலல்ல என்று ஜெர்மனி நிபந்தனை விதித்தது.

இந்த நிபந்தனையை ட்ராஸ்கி ஏற்க மறுத்தார். அப்போது லெனின் பின்வருமாறு கூறினார்.

பெண்கள் அணியும் உள்ளாடையை அணிந்தவாறு கையெழுத்திடுமாறு வற்புறுத்தினாலும் அதற்கும் பணிந்து கையெழுத்திடுவோம்.

இப்போது எமது பணி புரட்சியை பாதுகாப்பதேதவிர ஆடை பிரச்சனையல்ல என்றவாறு சீற்றத்துடன் தன் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி கொள்ளைக்காரத்தனமான அந்த ஒப்பந்தத்தில் ரஷ்யா கையெழுத்திட்டது.

இறுதியாக முதலாம் உலக மகாயுத்தத்தில் ஜெர்மனி தோல்வியடைந்ததும் நவம்பர் 1918ஆம் ஆண்டு ரஷ்யா 8 மாதங்களுக்கு முன்னிழந்த ரஷ்ய நிலப்பரப்பு அனைத்து ரஷ்ய வசமானது. லெனின் தீர்க்கதரிசனமும் எதனை இழந்து எதனை பாதுகாக்க வேண்டும் என்ற விவேகமும் வரலாற்று அத்தியாயத்தில் வெற்றிகளாய் பதிந்தன.

இங்கு ஒரு தெளிவான பின்வாங்கலை, ஒருவகை சரணாகதியை லெனின் மேற்கொண்டார். ஆனால் அவையே அவரது அரும்பெரும் புரட்சியை பாதுகாக்க உதவின. வரலாறு இப்படி பாடங்களை போதிக்கத் தவறவில்லை.

ஈழத்தமிழர்கள் தமது உரிமைகளை நிலைநாட்டுவதற்கான போராட்டத்தில்; வெற்றிபெற வேண்டுமென்றால் அதற்குப் பொருத்தமான இராஜதந்திர ரீதியிலான வெளியுறவுக் கொள்கையை வகுக்கவும், பின்பற்றவும் வேண்டும்.

இதற்கு மேற்படி மூன்று தலைவர்களினது இராஜதந்திர செயற்பாடுகள் எமக்கான சிறந்த முன்னுதாரணங்களாகும். இப்படிப்பட்ட நிலைப்பாடுகளை நாங்கள் பண்டைய வரலாறுகளிற்கூட காணலாம். அதற்கு ஓர் உதாரணமாக ஏதென்ஸ்-ஸ்பார்ட்டா அரசுகளுக்கிடையேயான உறவுகளை அவதானிக்கலாம்.

அதாவது இருநகர அரசுகளும் தமக்கிடையே இடையறாது மோதி வந்தன. ஆனால் கிமு 490ஆம் ஆண்டு பாரசீகம் கிரேக்கத்தின் மீது படையெடுத்த போது மேற்படி இரு நகர அரசுகளும் தமக்கிடையே நட்புறவு ஒப்பந்தத்தை மேற்கொண்டன.

இப்படி வரலாறு பல பாடங்களை எம்மிடம் முன்வைத்திருக்கிறது.

30 ஆண்டுகால யுத்த பூமியில் ஈழத் தமிழ் மக்கள் பெரும் புயல் சூழ்ந்த, கொதிநிலைமிக்க, கொந்தளிப்பான தமது பயணத்தின் இறுதியில் திசை தெரியாது தரைதட்டி நிற்கின்றனர்.

ஓளிக்கீற்றைக் காணாமல் கருங்கடலில் காரிருளில் பயணிக்க முடியாது. கலங்கரைவிளக்கம் இன்றியும், எக்காளத்தொனியின்றியும் பயணிக்க முடியாது.

இப்போது தேவைப்படும் ஒளிக்கீற்றையும், கலங்கரைவிளக்கத்தையும், எக்காளத்தொனியையும் வழங்கவல்ல நடவடிக்கைகளில் ஈழத் தமிழ் அறிஞர்களும், கலை-இலக்கிய படைப்பாளிகளும் ஈடுபட வேண்டியது முதற்கண் அவசியம்.

“சிந்தனையாளர்களும், படைப்பிலக்கிய கர்த்தாக்களும் ஒரு தேசத்திற்கான உள்ளுணர்வையும் கூடவே அத்தேசத்திற்கான ஆன்மாவையும் ஊட்டவல்லவர்கள்” என்ற கூற்று இங்கு நினைவுபடுத்தத்தக்கது.

இன்றைய நிலையில் ஈழத் தமிழ் மக்களுக்கு தேவைப்படுவது தமிழ்த் தேசிய மறுசீரமைப்பும், அதற்கான புதிய சிந்தனையுமாகும்.

சட்டை அணியவேண்டியது இலட்சியம் என்பதற்காக 3 வயதிற்குரிய சட்டையை 30 வயதில் அணியமுடியாது. அதேபோல 30 வயதிற்குரிய சட்டையை 3 வயதில் அணியமுடியாது. எது பொருத்தமோ அதுவே சரியானது.

இதனை மேற்படி வரலாற்று உதாரணங்கள் அனைத்தும் நிரூபித்து நிற்கின்றன. ஆகவே யதார்த்தத்திற்குப் பொருத்தமாகவும், சர்வதேச நிலைமைகளுக்கும், சவால்களுக்கும் ஈடுகொடுக்கக்கூடிய வகையிலும் தமிழ்த் தேசியம் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதை முதலில் உணரவேண்டியது அவசியம்.

அதனை உணர்ந்து ஏற்று அத்தகைய மறுசீரமைப்புப் பணியில் ஈடுபடாதுவிட்டால் தமிழ்த் தேசிய இனத்தை காப்பாற்ற முடியாத அவலம் ஏற்படும்.

இங்கு யதார்த்தத்தை சரிவர கருத்தில் எடுத்து அதற்குப் பொருத்தமாக பாதையை வகுத்து பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.

இதற்கான ஒளியையும், வழியையும் ஏற்படுத்துவதில் தமிழ் அறிஞர்களுக்கும், கலை-இலக்கிய படைப்பாளிகளுக்குமான பங்கு தலையாயது.

-http://www.tamilwin.com

TAGS: