பாடசாலை தமிழ்மொழி பாடநூல்களில் தமிழர் வரலாறு புறக்கணிப்பு: விசேட குழு

001பாடசாலை தமிழ்மொழிமூல வரலாற்று பாடநூல்களில் தமிழர் வரலாறு புறக்கணிப்பட்டிருப்பது தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழு அமைக்கப்படவுள்ளது.

கல்வி அமைச்சின் மூலமாக வெளியிடப்படுகின்ற பாடநூல்களில் (தரம் 6,7,8,9,10) வரலாற்று பாடத்திட்டத்தில் தமிழர் தொடர்பான வரலாறு திட்டமிடப்பட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா கல்வி அமைச்சின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தார்.

இதனைத் தொடர்ந்தே விசேட குழுவொன்றை அமைப்பதற்கு கல்வி இராஜாங்க அமைச்சர் தீர்மானித்தாக தெரிவித்தார்.

இது தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன் தலைமையில் கல்வி அமைச்சில் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான டக்ளஸ் தேவானந்தா,முஜிபுர் ரஹ்மான், கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவாவிதாரண, கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள் தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் தமிழ் பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

-http://www.tamilcnn.lk

 

TAGS: