மலையகத்திற்காக இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள 25000 தனி வீட்டுத்திட்டம் வரவேற்கத்தக்து. இது மலையக வரலாற்றில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தோவானந்தா தெரிவித்துள்ளார்.
வரவு, செலவு திட்ட விவாதத்தில் நேற்றைய தினம் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர்“ இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்
மலையகத்திற்கு தற்போது ஒதுக்கப்பட்டுள்ள வீடுகள் போதாது. குறிப்பாக 3 இலட்சம் வீடுகளாவது தேவைப்படும். இதனை பெற்றுக்கொடுக்க அமைச்சர் திகாம்பரம் முன்வர வேண்டும்.
நிலைப்பேன் அபிவிருத்தி , அனர்த முகாமைத்துவம் என்பவற்றை ஆராய்ந்து பின்னர் மலையக வாழ் மக்களுக்கான காணிகள் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
-http://www.tamilwin.com
https://youtu.be/ak7_obcge2Y?list=PLXDiYKtPlR7PtMZD3yh_03chNhzElUVCQ