மஹிந்தவை தொடர்ந்து மைத்திரியை அச்சுறுத்தும் மலேசியா தமிழர்கள்!

maithrirajapakseஇலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த மாதம் 15ஆம் திகதி மலேசியா செல்ல திட்டமிட்டுள்ளார்.

இந்த நிலையில் அங்கு செல்லும் ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுப்பதாக மலேசியாவிலுள்ள சில அரசியல் கட்சிகள் மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்கள் தெரிவித்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது பல பொதுமக்கள் கொல்லப்பட்டமைக்கு மைத்திரிபால சிறிசேனவும் அங்கம் வகித்தார்.

எனவே அவரை நாட்டுக்குள் அனுமதிக்க கூடாது என ஜோஹோர் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் ரோனி முருகன் தெரிவித்துள்ளார்.

மைத்திரிபாலவின் வருகைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்க மலேசியாவின் 10 பொலிஸ் நிலையங்களில் அனுமதி பெற்றிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜொகூர் தமிழர் சங்க மற்றும் இந்து மத உரிமை படை , பி.கே.ஆர், டி.ஏ.பி, அமானா உள்ளிட்ட 10 அரச சார்பற்ற அமைப்புக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது.

இலங்கை மற்றும் மலேசியாவுக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்க தாம் தீர்மானிக்கவில்லை, இருப்பினும் இலங்கையில் பல மரியாதைக்குரிய புள்ளிவிவரங்களும் உள்ளன அவற்றை நாம் வரவேற்க வேண்டும் என மலேசியா நாட்டின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

கோலாலம்பூர் மலேசிய தமிழ் தொண்டு நிறுவனங்கள் பல மைத்திரிபால சிறிசேனவின் வருகைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஜனாதிபதியின் வருகைக்கு எதிராக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை,மலேசியாவில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு முன் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

இதேவேளை அண்மையில் மலேசியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக பாரியளவில் ஆர்ப்பாட்டங்கள் அந்த நாட்டவர்களால் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

-http://www.tamilwin.com

TAGS: