வடமாகாணத்திற்கான விலங்கு, பறவை, பூ , மரம் ஆகியவற்றை மக்களுடைய கருத்துக்களை பெற்று மீள்பரிசீலனை செய்வதற்கு குழு ஒன்றை அமைக்க சபையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வடமாகாண சபையின் 2017ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மீதான விவாதம் இன்று நடைபெற்றிருந்தது. இதன்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அமர்வில் மாகாணசபையின் அடையாளமாக உள்ள மாகாண மரம், பூ, பறவை, விலங்கு ஆகியன மாகாண சபையை நாம் பொறுப்பேற்க முன் தீர்மானிக்கப்பட்டுவிட்டது.
குறிப்பாக மாகாண மரமாக மருதமரம், மாகாண பறவையாக புழுனி, மாகாண விலங்காக ஆண் மான் ஆகியன தேர்வு செய்யப்பட்டுள்ளது. இவை எமது மாகாணத்திற்கு பொருத்தமற்றவையாக உள்ளது.
எனவே, இவற்றை மீள்பரிசீலனை செய்து மாற்றியமைக்க சபை நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாகாண சுற்று சூழல் அமைச்சர் பொ.ஜங்கரநேசன் அவைதலைவர் சீ.வி.கே.சிவஞானத்திடம் கோரியிருந்தார்.
அதனை ஆமோதித்த அவை தலைவர் இது தொடர்பில் மக்களின் கருத்துக்களையும் உள்வாங்கி மீள்பரிசீலனை செய்ய குழு ஒன்றை விரைவில் நியமிக்க இணக்கம் தெரிவித்துள்ளார்.
-http://www.tamilwin.com

























