இலங்கை அரசானது யுத்தம் முடிந்து விட்டது என்றும். நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்று கூறி வருகிறது. ஆனால் இதுவரை கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்படவில்லை. குறைந்த பட்சம் இக்கொலைகளுக்கு தாமே காரணம் என்று கூட கூறவில்லை. இன் நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் கொடுக்கும் GSP + சலுகையை பெற்றுக் கொள்ள இலங்கை அரசு பாரிய திட்டங்களை தீட்டி வருகிறது.
இச்சலுகையை சிங்கள அரசு பெற்றுவிட்டால், தடையின்றி பல பொருட்களை ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்ய முடியும். அத்தோடு வரிச்சலுகை பெற்று பெரும் லாபத்தை பெறமுடியும். ஆனால் “மாற்றத்திற்கான சர்வதேச அமைப்பு” ஒன்று இலங்கைக்கு GSP + சலுகையை மீண்டும் கொடுக்க கூடாது என்றும். இலங்கை அரசு தமிழர்களின் பிரச்சனையை தீர்த்தபின்னரே அதனை கொடுக்கவேண்டும் என்று, ஐரோப்பிய ஒன்றியத்தை முறையாக கோரவுள்ளது.
அவர்கள் அதனை செய்ய குறைந்த பட்சம் 500 கையெழுத்து தேவை. ஆனால் லட்சம் கணக்கில் உள்ள லண்டன் தமிழர்களில் வெறும் 200 பேர் மட்டுமே கையொப்பம் போட்டு உள்ளார்கள். சில நினைக்கலாம் இலங்கை அரசுக்கு எதிராக நாம் இதனை செய்தால் இலங்கை செல்வதில் பிரச்சனை இருக்கும் என்று. ஆனால் அதில் எவ்வித உண்மையும் இல்லை. குறித்த சர்வதேச அமைப்பு மிகவும் நம்பிக்கைக்குரிய அமைப்பு ஆகும். அத்தோடு அது தனிப்பட்ட நபர்களின் ரகசியங்களையும் காத்து வருகிறது.
எனவே கீழ் காணும் லிங்கை அழுத்தி, அவர்கள் பக்கம் சென்று உடனடியாக உங்கள் பெயரையும் மின்னஞ்சலையும் கொடுத்து உங்கள் கையொப்பத்தை போடுங்கள். இவை எக்காரணம் கொண்டு வெளியே தெரியாது. குறைந்த பட்சம் 500 கையெழுத்தாவது தேவை.
-http://www.athirvu.com

























