பிரபாகரனின் கோரிக்கையை ஏற்குமா கூட்டமைப்பு…! 31ஆம் திகதி பதவி விலகுமாறு வலியுறுத்தல்

tna-press-400-seithyதமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மாவீரா்களையும், மண்ணையும், தமிழ் மக்களையும் மதிப்பவா்களாக இருந்தால் 31 ஆம் திகதி பாராளுமன்ற பதவியை இராஜினாமா செய்யவேண்டும் ஈரோஸ் பகிரங்கமா வேண்டுகோள் விடுக்கிறது.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் போராட்டத்தை மதிக்கின்ற சக்தியாக இருந்தால், தமிழ் மக்களையும் தமிழ் மண்ணையும் மதிக்கிறவர்களாக இருந்தால், இந்த மண்ணுக்காக தங்கள் உயிர்களை விட்ட ஆயிரக்கணக்காக இளைஞர் யுவதிகள் கணம் பண்ணுகின்றவர்களாக இருந்தால்,

இலட்சக்கணகாக கொல்லப்பட்ட தமிழ் மக்களை நேசிக்கின்றவர்களாக இருந்தால், நேர்மையானவர்களாக இருந்தால் நீங்கள் அனைவரும் இந்த 31ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை இராஜினாம செய்ய வேண்டும்.

இதனை செய்வார்களா? என அதன் செயலாளர் நாயகம் இ.பிரபாகரன் கேள்வி எழுப்பி உள்ளார். இன்று கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரமதாச காலத்தில் கூறினோம் போரை நிறுத்துங்கள், தீர்வை முன்வையுங்கள் இல்லையெனில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜனாமா செய்துவிடுவோம் என்று.

ஆனால் பிரமதாச அவ்வாறு செய்ய, நாங்கள் ஈரோஸின் 13 பாராளுமன்ற உறுப்பினா்களும் பதவிகளை இராஜினாமா செய்து பாராளுமன்றத்தை விட்டு வெளியேறினோம்.

ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனை செய்யுமா? எனக் கேள்வி எழுப்பிய அவர், தமிழ் மக்கள் 2009 இற்கு பின்னர் நல்ல தலைமையின்றி காணப்படுகின்றனர்.

எனவே அரசியல் ரீதியில் தமிழ் மக்ளுக்கான நல்ல தலைமையை உருவாக்க வடக்கு கிழக்கு, மலையக தமிழ் மக்கள் அணிதிரள வேண்டும் என ஈழவர் ஜனநாயக முன்னணி (ஈரோஸ்) அழைப்பு விடுத்துள்ளது.

நாட்டில் உள்ள அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்று சேர்ந்தாலும் தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்றுகொள்ள முடியாது. காரணம் கடந்த காலங்களில் இந்தக் கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்தது தங்களின் சுயநலனுக்காக.

எனவேதான் நாம் கோருகின்றோம் தமிழ் மக்களுக்கு நல்ல தீர்வு கிடைக்க வேண்டும் என்றால் வடக்கு கிழக்கு மலையக தமிழ் மக்கள் அனைவரும் ஓரணியில் நல்ல தலைமைத்துவத்தை ஏற்படுத்த அணிதிரள வேண்டும்.

தற்போது தமிழ் மக்கள் நல்ல தலைமைத்துவம் இன்றி வெற்றிடத்திற்குள் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். ஒரு நல்ல தலைமைத்துவத்தை ஏற்படுத்துவது தான் ஈரோஸின் முதலாவது நோக்கம்.

எனவேதான் நாங்கள் இச் சந்தர்ப்பத்தில் சீரழிந்து போயுள்ள சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு பொதுமக்கள், புத்திஜீவிகள் மட்டுமல்ல மாற்று அரசியல் தரப்புக்களையும் அழைக்கின்றோம்.

ஒன்றிணைந்து செயற்பட வாருங்கள் என்று. நாங்களும் உங்கள் அனைவரிடமும் இணைந்து செயற்பட தயாராக இருக்கின்றோம். தமிழ் மக்கள் தற்போதுள்ள தங்களின் பிரதிநிதிகளால் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வருகின்றார்கள்.

தமிழ் மக்களின் வாக்குகளை மத்திய அரசிடம் கோடிக்கணக்கான பணத்திற்கு விற்கின்றார்கள். தமிழ் மக்களின் தற்போதைய தலைமை தொடர்பில் குழந்தை பிள்ளைகளுக்கு கூட தெரியும். அவர்களால் எதுவும் செய்ய முடியாது.

அவர்களால் தமிழ் மக்களுக்கு நல்ல தீர்வை பெற்றுக்கொடுக்க முடியாது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தேர்தல் காலங்களில் மட்டுமே தீ்ர்வை பெற்றுத் தருவோம் என பேசுவார்கள்.

பின்னர் அதனை கைவிட்டுவிடுவார்கள். கடந்த வருடமும் சொன்னார்கள், இந்த வருட இறுதிக்குள் தீர்வை பெற்றுதராவிட்டால் நாங்கள் பதவி விலகிவிடுவோம் என்று. ஆனால் அவ்வாறு செய்வார்களா? இல்லை.

ஆனால் ஈரோஸால் அப்படி சொல்ல முடியும். அதற்கு அந்த தகுதி இருக்கிறது. ஈரோஸ் ஐக்கிய இலங்கைக்குள் சமஸ்டி முறையிலான தீர்வையே வலியுறுத்துகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

-http://www.tamilwin.com

TAGS: