ஜேர்மன் பெர்லின் நகரில் கனரக வாகனம் ஒன்றை கிறிஸ்மஸ் சந்தையில் மோத செய்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்தாரி இத்தாலியில் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
அனிஸ் அம்ரி என்ற நபரே இத்தாலி மிலன் நகரில் வைத்து இன்று பொலிஸாரினால் சுட்டுகொலை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த திங்கள் கிழமை ஜேர்மன் பெர்லின் நகரில் இடம்பெற்ற இந்த தாக்குதலில் சுமார் 12 பேர் வரையில் உயிரிழந்த நிலையில், 50க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்திருந்தனர்.
வீதி பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த இளைஞனை (அனிஸ் அம்ரி) மறித்து அடையாள அட்டையைக் காண்பிக்குமாறு கேட்டனர்.
எனினும், தனது பையில் வைத்திருந்து துப்பாகியை கொண்டு அனிஸ் அம்ரி பொலிஸாரை நோக்கி தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து பொலிஸாருக்கு அனிஸ் அம்ரிக்கும் இடையில் கடுமையான துப்பாக்கிச் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது அம்ரி ஸ்தலத்தில் கொல்லப்பட்டுள்ளார்.
இதன் போது பொலிஸ் அதிகாரி ஒருவரும் காயமடைந்துள்ளார். இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது பெர்லின் பாரவூர்த்தியில் இருந்து கைவிரல் ரேகையும் அனிஸ் அம்ரியின் கைரேகையும் ஒத்து போவதாக இத்தாலியக் பொலிஸார் இணையத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
-http://www.tamilwin.com