நாம் வேற்றுக்கிரக வாசிகளை தொடர்பு கொண்டு விட்டோம், அவர்கள் இருப்பது உறுதி, அடிக்கடி அவர்கள் பூமிக்கு வந்து விட்டு செல்கின்றார்கள். இவை அடிக்கடி வெளிவரும் வார்த்தைகள்.
மனிதன் எப்போது பூமியின் அமைவிடம் பற்றி அறிந்து கொண்டானோ அந்த நாள் முதல் எமது அயல் கிரகத்தவரை அதாவது வேற்றுக்கிரக வாசிகளை தேடும் முயற்சியில் சளைக்காமல் தொடர்ந்து கொண்டு இருக்கின்றான்.
எமக்கு மட்டும் ஏன் முடியாது என தலையை பிய்த்துக் கொண்ட உலகின் தலை சிறந்த விஞ்ஞானிகள் ஓர் புதிய முற்றிலும் வியக்கத்தக்க கண்டு பிடிப்பை கண்டு பிடித்துள்ளார்கள்.
அதுதான் நட்சத்திர இலக்கு Brake throughout star shot எனப்படும் ஓர் விண்கலம். இதன் மூலம் ஒளி ஆண்டுகளை கொண்ட நட்சத்திரங்களை இலகுவில் அடைந்து விடலாம்.
அன்றாடம் ஓர் விண்கலத்தை உருவாக்குகின்றார்களே இதில் என்ன வியப்பு என்றால் இந்த விண்கலத்தின் நிறை வெறும் 1 கிராமைக் கூட தாண்டாது என்பதே.
முழுப்பொய் என்று நினைத்து விடாதீர்கள், இந்த Brake throughout star shot என்பதை நிறைவேற்றப்போவது வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பில் ஆய்வு செய்து வரும் உலகின் மிகச் சிறந்த விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்.
அவருடன் கைகோர்த்துள்ளார் ரஷ்யாவின் தொழிலதிபரும் இயற்பியலாளருமான யூரிமில்னர். கிட்டத்தட்ட 10 கோடி அமெரிக்க டொலர்களை தாராள மனதுடன் இந்த திட்டத்திற்காக கொடுத்து அறிமுகப்படுத்தியுள்ளார்.
மனிதகுலம் அறிவியல் வளர்ச்சி அடைந்தது முதல் வேற்றுக்கிரக வாசிகள் தொடர்பில் ஓர் அச்சம் ஏற்பட்டுள்ளது அதுவே அவர்கள் எம்மை வேவு பார்த்துக் கொண்டு இருக்கின்றார்களா என்பது.
அதனை வலுப்படுத்தும் வகையில் அன்றாடம் பல ஆதாரங்களை பூமியில் கண்டு பிடித்து வருகின்றார்கள். இதனால் மனித குலத்திற்கு வெளிப்படுத்தாமல் மறைமுகமான அச்சத்தில் சர்வதேசம் வேற்றுக் கிரகவாசிகள் தொடர்பில் பல ஆய்வுகளை செய்து வருகின்றனர்.
எப்படியும் அவர்களை கண்டு பிடிக்க வேண்டும் என முயற்சி செய்த விஞ்ஞானிகள் பல்லாயிரம் கணக்கான ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ள ஆல்பா சென்டாரி எனப்படும் நட்சத்திரத் தொகுதியில் வேற்றுக் கிரகங்கள் இருப்பதை முதலில் கண்டு பிடித்தார்கள்.
ஆனாலும் அதனை நிரூபிக்க வேண்டுமே அந்த கிரகத்திற்கு சென்று ஆதாரங்களை சேகரிக்க வேண்டும் என்பது அடுத்த கட்ட பணி ஆகிப்போனது.
ஓர் ஒளி ஆண்டு என்பது 9 லட்சத்து 46 ஆயிரம் கோடி கிலோ மீட்டர் தொலைவு ஆகும். இத்தனை தூரத்தை நினைக்கும் போதே தலை சுற்றும் அதனை கடப்பது எப்படி. அதன் முடிவே இந்த Brake throughout star shot எனப்படும் விண்கலம்.
ஆல்பா சென்டாரி என்ற நட்சத்திரத் தொகுதியில் உள்ள கிரகங்களில் வேற்றுக்கிரகவாசிகள் இருப்பதை நம்பும் விஞ்ஞானிகள் அதனை முதலில் ஆய்வு செய்ய திட்டமிட்டு சுமார் 100 மில்லியன் அமெரிக்க டொலர் திட்டத்தில் இந்த Brake throughout star shot விண்கலத்தை உருவாக்கியுள்ளார்கள்.
ஒளியின் வேகத்தில் பயணம் செய்தால் சுமார் 4.3 வருடத்தில் ஆல்பா சென்டாரியை அடையலாம் ஆனால் அந்த வேகம் அத்தனை எளிதல்ல. அதற்காகவே இந்த விண்கலம் வேவு பார்க்க அனுப்பப்பட உள்ளது.
ஒரு கிராம் அளவு கூட இல்லாத இந்த விண்கலத்திற்கு எரிபொருள் அவசியம் இல்லை ஒளி மூலம் இது பயணிக்கும் வல்லமை கொண்டது.
அதாவது ஒளி இதனை உந்தித் தள்ளும் இதற்காக சுமார் 100 ஜிகா வார்ட் ஆற்றல் கொண்ட லேசர் கதிர்கள் தான் இந்த விண்கலத்தை சுமந்து கொண்டு செல்லும் பணிக்காக தயாரிக்கப்படுகின்றன.
இந்த லேசர் கதிர்கள் மூலம் ஒளியின் வேகத்தில், நினைத்தும் பார்க்க முடியாத அதிவேகத்தில் இது பயணித்து அந்த கிரகங்களை அடைந்து விடும்.
இப்படி ஒன்று அல்ல 1000 கணக்கானவை ஒவ்வொரு திசையிலும் அனுப்ப ஆயத்தமாக உள்ளன. இங்க ஒரு விண்கலத்தின் செலவு 100 மில்லியன் அமெரிக்க டாலர் என்பதை கவணத்தில் கொள்ளுங்கள்.
வேற்றுக்கிரகவாசிகள் இல்லை என்றால் இத்தனை கோடிகளை வாரி இறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது மிக முக்கியம்.
இப்போது இந்த திட்டம் விண்வெளி கதிர் இயக்கத்திற்கு தாக்குபிடிக்கும் வகையில் அமைக்க வேண்டும் அது தன்னைத் தானே சரி செய்து கொள்ளும் தொழில் நுட்பத்தின் மூலம் சாத்தியம் என கண்டு பிடித்துள்ளார்கள்.
2017ஆம் ஆண்டு முதல் இதனை நிறைவேற்ற காத்திருக்கின்றார்கள். இந்த திட்டத்தின் மூலம் கூடிய விரைவில் வேற்றுக்கிரக வாசிகளை கண்டு பிடித்து அவர்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
இத்தனை வருட தேடலுக்கு பதில் கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் விஞ்ஞானிகள் இந்த திட்டத்தை நிறைவேற்ற ஆவலோடு செயற்பட்டு வருகின்றனர்.
-http://www.tamilwin.com