ஜேர்மன் நாட்டில் தீவிரவாத தாக்குதலை நிகழ்த்திய நபரை சுட்டுக்கொன்ற பொலிஸ் அதிகாரிகள் இருவர் தற்போது தலைமறைவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜேர்மன் தலைநகரான பெர்லினில் கடந்த திங்கள் கிழமை அன்று Anis Amri என்ற தீவிரவாதி லொறி மூலம் நடத்திய தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். 50 பேர் படுகாயம் அடைந்தனர்.
இச்சம்பவத்தை தொடர்ந்து தீவிரவாதியை கைது செய்ய ஐரோப்பா முழுவதும் பொலிசார் முடக்கி விடப்பட்டனர்.
இந்நிலையில், இத்தாலியில் உள்ள மிலான் நகரில் தீவிரவாதி Luca Scata(29) என்ற பொலிஸ் அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்டான்.
இச்சம்பவத்தில் தீவிரவாதி திருப்பி சுட்டதில் Christian Movio(36) என்ற பொலிசாருக்கு லேசான காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இதுபோன்ற ஒரு சூழலில் தீவிரவாதியை சுட்டுக் கொன்ற பொலிஸ் அதிகாரிகளை பழிக்கு பழி வாங்க ஐ.எஸ் தீவிரவாதிகள் திட்டம் தீட்டியுள்ளதாக பொலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இத்தகவலை தொடர்ந்து இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் தற்போது தலைமறைவாகியுள்ளனர். மேலும், இருவரின் பேஸ்புக் பக்கங்களும் நீக்கப்பட்டுள்ளது.
இது குறித்து உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ள தகவல் ஒன்றில், ‘தீவிரவாதியை சுட்டுக்கொன்ற பொலிசாருக்கு ஆபத்து இருப்பது உண்மை தான். எனவே, இந்த அதிரடி ஆப்ரேஷனில் ஈடுப்பட்ட அனைத்து பொலிசாரும் உஷாராக இருக்க வேண்டும்’ என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-http://news.lankasri.com