கடந்த 25ஆம் திகதி ரஷ்யாவிலிருந்து சிரியா நோக்கி புறப்பட்ட ராணுவ விமானம் கருங்கடலில் மோதி விபத்துக்குள்ளானதில் 92 பேரும் பலியானார்கள்.
இதில் உயிரிழந்த பலரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து உடல்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த விபத்துக்கு தொழில்நுட்ப கோளாறுகள் தான் காரணமாக இருக்கும் எனவும் தீவிரவாதிகள் தாக்குதலாக இருக்க வாய்ப்பில்லை எனவும் அந்நாட்டு அதிகாரிகள் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆனாலும் நிஜ காரணம் இன்னும் புலப்படவில்லை.
இதனிடையில் விமானத்தில் இருந்தவர்கள் கடைசியாக பேசிய விடயம் First Flight ரெக்கார்டர் மூலம் தற்போது தெரியவந்துள்ளது.
மேலும் விபத்து நடக்கும் முன்னர் விமானத்தில் இருந்த விமானி, இன்ஜினியர் ஆகியோர் விமானத்தில் ஏதோ பிரச்சனை என பேசியுள்ளனர்.
ஆனால் அதை சரி செய்வதற்கு முன்னரே விமானியின் கட்டுப்பாட்டை இழந்துள்ள விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதனிடையில் மேலும் சில First Flight ரெக்கார்டர்கள் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு விமானத்தில் இருந்தவர்கள் பேசிய வேறு விவரங்கள் தெரியவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
-http://news.lankasri.com