பைபிள் படித்த பெண்ணை சரமாரியாக தாக்கிய இஸ்லாமிய அகதி

austriaஆஸ்திரியா நாட்டில் கிறித்துவர்களின் புனித நூலான பைபிளை படித்துக்கொண்டுருந்த பெண்ணை இஸ்லாமிய அகதி ஒருவர் கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரியாவின் Upper மாகாணத்தில் உள்ள Timelkam நகரில் தான் இந்த தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்நகரில் உள்ள முகாம் ஒன்றில் வெளிநாடுகளை சேர்ந்த அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், 50 வயதான கிறித்துவ பெண் ஒருவரை பைபிள் புத்தகத்தை படிக்குமாறு அங்குள்ள கிறித்துவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

கிறித்துவர்களின் அழைப்பை ஏற்ற அப்பெண் அவர்களது முகாமிற்கு சென்றுள்ளார். இதே முகாமில் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த 22 வயதான நபரும் தங்கி வந்துள்ளார்.

முகாமில் நுழைந்த அப்பெண் பைபிள் புத்தகத்தை வாசிக்க தொடங்கியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்நபர் சமையலறைக்கு சென்று கத்தியை எடுத்து வந்து பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இச்சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக நபரை தடுத்து நிறுத்தி பெண்ணை காப்பாற்றியுள்ளனர். கிறித்துவ பெண் தடினமான உடுப்பு அணிந்திருந்ததால் லேசான காயங்களுடன் அவர் உயிர் தப்பியுள்ளார்.

தாக்குதலை நடத்திய நபர் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இது குறித்து பொலிசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் ‘பெண் மீது தனக்குள்ள தனிப்பட்ட பிரச்சனை காரணமாக அவரை தாக்கியதாக’ கூறியுள்ளார்.

வாலிபரை சிறையில் அடைத்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

-http://news.lankasri.com