செவ்வாயில் சிலந்திக்கு இணையான மிகப் பெரிய உயிரினம்!

செவ்வாய்க் கிரகத்தில் சிலந்திக்கு இணையான உயிரினம் ஒன்று தென்பட்டதாக வேற்று கிரகவாசிகள் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இது சம்பந்தமான புகைப்படங்களை நாசா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படத்தில் சிலந்திக்கு இணையான ஒரு பெரிய உயிரினம் தென்படுவதுடன் அது பாறையல்ல என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதனை சிலர் நத்தை என்றும் சிலர் சிலந்தி என்றும் வேறு சிலர் இது நான்கு கால்களை கொண்ட குரங்கை போல் இருப்பதாகவும் கூறுகின்றனர்.

ஆய்வாளர்கள் கடந்த 2012 ஆம் ஆண்டில் இருந்து செவ்வாய்க் கிரகத்தில் தென் பட்ட பல உருவங்கள் தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் இன்னும் கால் பதிக்கவில்லை என்பதால், அங்குள்ள உயிரினங்கள் சம்பந்தமான உண்மைகள் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

எது எப்படி இருந்த போதிலும் செவ்வாயில் அண்மையில் தென்பட்ட உயிரினம் தொடர்பான புகைப்படத்தை வெளியிட்டுள்ள போதும், நாசா நிறுவனம் செவ்வாய்க் கிரகத்தில் உள்ள உயிரினம் தொடர்பான உண்மையை மறைப்பதாகவும் ஆய்வாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

 

-http://www.tamilwin.com