திருமலையில் பாண்டியனின் கோட்டை! திட்டமிட்டு சிதைக்கப்படும் சின்னம் மற்றும் தமிழ் எழுத்துக்கள்!!

திருகோணமலையில் அமையப்பெற்ற ஒல்லாந்தர் கால கோட்டையை உண்மையில் யார் கட்டியது? அதன் ஆட்சியாளர் யார்? அந்த கோட்டையில் காணப்படுகின்ற சின்னம் எவ்வகையானது..? என பல கேள்விகளுக்கு மத்தியில் இன்று நாம் இருந்து கொண்டிருக்கின்றோம்.

உண்மையில் அந்த கோட்டையினை எந்த மன்னன் கட்டினார் என யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். அந்த வகையில் ஒல்லாந்தர் காலக்கோட்டை திருகோணமலை மாவட்டத்தின் திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு செல்லும் முன்னரே அமைந்துள்ளது.

வரலாற்று சிறப்பிமிக்க இந்த கோட்டையை ஒல்லாந்தர் கால கோட்டை என கூறுவர். ஆனால் உண்மையிலும் அது ஒல்லாந்தர் கோட்டை அல்ல பாண்டிய மன்னனால் கட்டப்பட்ட கோட்டை ஆகும்.

இக்கோட்டையை பாண்டிய மன்னனிடம் இருந்து ஒல்லாந்தர் கைப்பற்றினர். பாண்டிய மன்னன் திருமலையை ஆட்சி செய்த காலத்தில் அமைக்க பெற்ற கோட்டை என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த உண்மையை உறுதிப்படுத்த கோட்டை வாயிலில் பாண்டிய மன்னனின் அரச சின்னமான மீன் இலட்சினை பொறிக்கப்பட்டு சில தமிழ் வார்த்தைகள் காணப்படுகின்றன.

தமிழர்கள் தொன்றுதொட்டு வந்த காலத்தில் திருகோணமலையை ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளனர் என்பதற்கு இது சிறந்த ஒரு எடுத்தக்காட்டாகும்.

இலங்கையை தமிழ் மன்னர்கள் ஆட்சி செய்ததற்கு வரலாறு மற்றும் தொல்பொருட்கள், காவியங்கள், இலட்சினைகள், புகழ்பெற்ற கோட்டைகள், ஆலயங்கள் உள்ளிட்ட பல வரலாற்று சார்ந்த நினைவுப்பீடங்களை எடுத்து காட்டுகின்றோம்.

எனினும், தற்போது அந்த கோட்டையில் காணப்பட்ட பாண்டிய மன்னனின் சின்னம் மற்றும் தமிழ் எழுத்துக்கள் ஆகிய அனைத்தும் நிற பூச்சுக்கள் பூசப்பட்டு மறைக்கப்பட்டுள்ளமை கவலைக்குரிய ஒன்றாகும்.

-http://www.tamilwin.com

TAGS: