அமெரிக்காவில் ஹாலிவுட் விமானநிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விமான நிலையத்தில் நூற்றுக்கு மேற்பட்ட பயணிகள் காத்திருந்த நிலையில், அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விமானநிலையத்தின் டெர்மினல்-2 என்று அழைக்கப்படும் பொருட்கள் வைக்கும் பகுதியில் இருந்து இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஆறு பேருக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-http://www.tamilwin.com