இலங்கையில் போர்க்குற்றவாளிகளை தண்டிக்க அமெரிக்கா நடவடிக்கை!

america_sl_eye_001இலங்கையில் இயங்கும் சில அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு 1.7 மில்லியன் டொலர்களை வழங்க அமெரிக்க புலனாய்வு நிறுவனமான சீ.ஐ.ஏ அமைப்பு தீர்மானித்துள்ளது.

போர் குற்றம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் செயற்பாட்டை உருவாக்கவும் இந்த செயற்பாட்டின் ஊடாக சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனையை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைக்காக இந்த பணம் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் ஜனநாயகத்திற்கான அமெரிக்க அரச சபை என்ற அமைப்பின் ஊடாகவே இந்த நிதி வழங்கப்படுகிறது.

நிதியை பெற்றுக்கொள்வதற்காக எதிர்வரும் பெப்ரவரி 13 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு இலங்கையில் உள்ள அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

channel-04இதனை தவிர யு.எஸ். எயிட் நிறுவனம் இலங்கையின் ஜனநாயகம் மற்றும் பொறுப்புக் கூறல் திட்டங்களை வலுப்படுத்துவதற்காக 13.7 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்க தீர்மானித்துள்ளது.

நல்லாட்சி செயற்பாடுகள் சம்பந்தமான திட்டங்களுக்கு செலவிட இந்த நிதி வழங்கப்படுவதாக அமெரிக்க அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்கும் முன்னர் நிதியுதவி அளிக்கும் இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

வெளிநாடுகளின் விவகாரங்களில் தலையிடப் போவதில்லை என டொனால்ட் ட்ரம்ப் ஏற்கனவே கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-http://www.tamilwin.com

TAGS: