டொனால் டிரம்ப் வெற்றி செல்லுமா? பரபரப்பான அறிக்கையை வெளியிட்டது அமெரிக்கா நாடாளுமன்றம்

Donald Trumpநடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரியை தோற்கடித்தார்.

டிரம்பின் வெற்றிக்கு ரஷ்யா உதவியது என ஹிலாரி கிளிண்டன் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார்.

இதனை மறுத்த ரஷ்யாவின் ஜனாதிபதி புடின், அவர் தோற்றுவிட்டு எங்களை காரணம் சொல்வதாக ஹிலாரியை பார்த்து கூறினார்.

மேலும் திரும்ப வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் கூறப்பட்டது.

இந்தநிலையில், அமெரிக்காவின் நாடளுமன்றமே ட்ரம்ப் வெற்றியை உறுதி செய்துள்ளது.

இதுதொடர்பான முறைப்படி அறிவிப்பை அமெரிக்க பாராளுமன்றத்தின் மக்களவை மற்றும் பிரதிநிதிகள் அவையின் கூட்டத் தொடரின்போது அந்நாட்டின் துணை ஜனாதிபதி ஜோ பிடன் வெளியிட்டார்.

இதன் மூலம் அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் விரைவில் பதவியேற்கவிருப்பது மீண்டும் உறுதியாகியுள்ளது.

-http://news.lankasri.com