கடந்த நவம்பர் மாதம் 8ஆம் திகதி நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஹிலாரியை குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் தோற்கடித்தார்.
ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தி டொனால்ட் ட்ரம்பை வெற்றி பெற செய்ய ரஷ்யா தேர்தல் நடந்த சமயத்தில் உதவியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த குற்றசாட்டை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் மறுத்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அரசு ரகசிய விசாரணைக்கு புலனாய்வுத் துறையிடம் உத்தரவிட்டது. அதன் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி, அமெரிக்க தேர்தல் வாக்குப்பதிவின் போது தேர்தல் ஆணைய இணையதளத்தை ரஷ்ய உளவு துறை ஹேக் செய்து ட்ரம்ப் வெற்றிக்கு உதவியுள்ளது.
இந்த விடயத்தை ரஷ்யாவின் ஜனாதிபதி புதின் உத்தரவின் பேரில் தான் அவரின் உளவுதுறை செய்துள்ளது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை வெளியான சில மணி நேரங்களில் இதை டொனால்ட் ட்ரம்ப் மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-http://news.lankasri.com