தனிமை தீவில் வாழும் 30 பேர் – இவர்களின் புத்தாண்டு பிறப்பு ஜனவரி 13ம் திகதி!

islandமிகப் பெரிய சமுத்திரத்திற்கு மத்தியில் உள்ள தனித்து இருக்கும் தீவில் வாழ்வதற்கு நமக்கு வாய்ப்பு கிடைத்தால் இது அபூர்வமான அனுபவமாக இருக்கும்.

உண்மையில் அப்படி உலகில் தனித்து காணப்படும் தீவு ஒனறில் மனிதர்கள் சிலர் வாழ்கின்றனர்.

பிரித்தானியாவுக்கு சொந்தமான கடற்பரப்பில் இருக்கும் இந்த தீவில் 30 பேர் வசித்து வருகின்றனர்.

உலகில் நவீன தொழிற்நுட்பங்களில் அவர்கள் தொலைபேசியை மாத்திரமே பயன்படுத்தி வருகின்றனர்.

இங்கிலாந்தில் வாழும் சாதாரண கிராம வாசிகளை போல் வாழும் இவர்கள் உலகில் ஆரம்ப காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஜூலியன் நாட்காட்டியையே பயன்படுத்துகின்றனர்.

இவர்கள் நத்தார் பண்டிகையை ஜனவரி 6ம் திகதி கொண்டாடுவதுடன் புத்தாண்டை ஜனவரி 13ம் திகதி கொண்டாடுகின்றனர்.

மந்தைகள் மற்றும் பயிர் செய்கையில் தமக்கு தேவையானதை பெற்றுக்கொள்ளும் இவர்கள், சாதாரண உலகில் தமக்கு தேவையான அனைத்திலும் தாம் தன்னிறைவுடன் இருப்பதாக தீவில் வாழும் 30 பேரும் குறிப்பிட்டுள்ளனர்.

உலகம் எப்படி மாறினாலும் தாம் மாறப் போவதில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

-http://www.tamilwin.com