நம்பிக்கை இழந்துவிட்ட வடக்கு கிழக்கு!

gajenகடந்த வருடம் செப்டம்பர் மாதம் 24ம் திகதி யாழில் நடைபெற்ற எழுக தமிழ் நடைபெற்ற போது ஒரு சந்தேகம் தான் இருந்தது. என்னவென்றால் ஒற்றையாட்சி முறைதான் வரக்கூடும் என,

ஆனால் இரண்டாவது எழுக தமிழ் மட்டக்களப்பில் நடைபெறவிருக்கின்ற வேளையில் அந்த எழுக தமிழை நடத்த இருக்கின்ற வேளை நம்பிக்கை இழந்துவிட்டது என பொ.கஜேந்திரகுமார் தெரிவித்தார்.

நேற்று புதன்கிழமை மட்டக்களப்பு – வாகரை கண்டலடி பிரதேசத்தில் மட்டக்களப்பில் நடைபெறப்போகும் எழுக தமிழ் தொடர்பான பிரதேச மட்டத்திலான தலைவர்களை சந்தித்து நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், இன்றைய நிலையில் சந்தேகத்திற்கு இடமில்லை. வருவது ஒற்றையாட்சி முறைதான் என தெட்டத்தெளிவாக தெரிகிறது.

நாட்டின் சனாதிபதி ஒற்றையாட்சி முறைதான், மாற்றம் இல்லை என உறுதியாக தனது இரண்டாவது ஆட்சியின் வருட பூர்த்தி விழாவில் சிங்கள மக்கள் முன்னிலையில் வாக்குறுதிபட கூறியுள்ளார்.

ஆனால் வடகிழக்கில் இருக்கும் ஒருசிலர் ‘தங்களுக்கு நம்பிக்கை இருக்கு, தங்களுக்கு நம்பிக்கை இருக்கு’ என தாங்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்து உருவாக்கத்தினை இன்றைய நிலையில் கூட கூறிவருகின்றமை மன வேதனையளிக்கின்றது.

வடகிழக்கில் இருக்கும் தமிழர்களின் ஆதரவைப் பெற்று ஒற்றையாட்சிக் கொள்கை அரியாசனம் ஏறும் நிலைமையை சிங்கள தேசம் உருவாக்கி வருகின்ற நிலையை இன்றைய நிலையில் முன்னெடுத்து வருகின்றார்கள் என தெரிவித்தார்.

 

-http://www.tamilwin.com

TAGS: