தொடரும் சோகம்! பரிதாபமாக உயிரிழந்த 100 அகதிகள்.. மீட்பு பணிகள் தீவிரம்

refugees boat sinkலிபியாவின் கடற்பகுதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 100ற்கும் மேற்பட்ட அகதிகள் பலியாகி இருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளுக்கு பலர் அகதிகளாக செல்கின்றனர். நிலப்பகுதி வழியாக செல்பவர்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றனர்.

இதனால் கடற்பகுதி வழியாக சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்கு பலர் உயிரை பணயம் வைத்து படகுகளில் செல்கின்றனர்.

இப்படி அகதிகளாக செல்கையில் படகு விபத்துக்குள்ளாகி பலரும் இறக்கும் சம்பவங்கள் நடப்பது தொடர் கதையாகி வருகிறது.

இந்நிலையில் லிபியாவில் இருந்து இத்தாலிக்கு வந்த அகதிகள் படகு ஒன்று மத்திய தரைக்கடலில் மூழ்கியது.

தகவல் அறிந்தது வந்த பிரான்ஸ் கடற்படை கப்பலும், 2 வர்த்தக கப்பல்களும், விமானங்களும் மீட்பு பணியில் ஈடுபட்டன.

படகில் ஏராளமானவர்கள் பயணம் செய்தனர். இருந்தும் 4 பேரை மட்டுமே மீட்க முடிந்தது. 8 பேர் பிணமாக மீட்கப்பட்டனர்.

இந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் கடலில் மூழ்கி பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

-http://news.lankasri.com