டொரண்டோ: தை திருநாள் பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. நமது இந்திய பிரதமர் தமிழில் அழகாக பேசி தை பொங்கல் நல் வாழ்த்துக்களை தெரிவித்தார். இதேபோல கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ருடீயு கனடா மற்றும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.
அவர் பதிவிட்டுள்ள வீடியோவில், அனைவருக்கும் வணக்கம் என தமிழில் பேசத் தொடங்கிய அவர், தமிழர்களுக்கு இனிய தைப்பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தை தமிழர் பாரம்பரிய மாதமாக கடைப்பிடிக்க நாடாளுமன்றத்தில் கடந்தாண்டு தாங்கள் முடிவெடுத்துள்ளதாக கூறியுள்ள அவர், கனடாவின் வலிமையிலும் செழுமையிலும் தமிழர்களின் பங்கு மகத்தானது என தெரிவித்துள்ளார்.
தனது குடும்பத்தின் சார்பில் தமிழர்களுக்கு இனிய தைப் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும் கனடா பிரதமர் குறிப்பிட்டுள்ளார். அவருடைய பொங்கல் வாழ்த்து செய்திக்கு பல்வேறு தரப்பினரும் நன்றியை தெரிவித்து உள்ளனர். ஆயிரக்கணக்கானோர் லைக் போட்டதோடு பகிர்ந்து உள்ளனர்.
உங்கள் வாழ்த்துக்கள் அணைத்து தமிழர்களுக்கும் மகிழ்ச்சி.நன்றி.
அழகான முகத்தில் செழுமையான பொங்கல் வாழ்த்துகள் – உலகத்தில் சிறப்போடு வாழ்வாண்டா தமிழன் -தமிழன்-தமிழன் -தமிழன் -தமிழன் -தமிழன் -தமிழன் -தமிழன் -தமிழன் -தமிழன் –
இதுதான் முதலாம் உலகம். 3 ம் உலகம் மற்றவர்களை மதிக்காது– இங்கு என்ன நடக்கிறது என்பதே உதாரணம்.