நைஜீரியாவின் வடக்கில் ரன் பகுதியில் அமைந்துள்ள அகதிகள் முகாம் மீது அந்நாட்டு வான் படையினர் தவறுதலாக மேற்கொண்ட குண்டு வீச்சு தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட அகதிகள் உயிரிழந்துள்ளனர்.
அந்நாட்டு இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் லக்கி இரப்பார் இந்த தாக்குதல் சம்பவத்தை உறுதி செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.
இந்த தாக்குதலில் குறித்த முகாமில் சேவையில் ஈடுபட்டிருந்த வைத்தியர்கள் பலரும் கொல்லப்பட்டுள்ளதுடன், பலரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை மேற்கொண்டு வருக்கின்றனர். இந்நிலையில் தீவிர வாதிகளுக்கு எதிராக அந்நாட்டு இராணுவம் பதில் தாக்குதலை மேற்கொண்டு வருகின்றது.
குண்டு வீச்சு தாக்குதலுக்கு இலக்கான முகாம் பகுதியில் அரச தரப்பினர் விரைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதேவேளை, நைஜீரிய அரச தரப்பில் இடம்பெற்றுள்ள மிகப்பெரிய முதல் தவறுதல் இது என்று கருதப்படுகிறது.
-http://www.tamilwin.com