அமெரிக்காவின் ஜனாதிபதியாக உள்ள டிரம்பை கொலை செய்வேன் என்று மிரட்டல் விடுத்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் நாளை பதவி ஏற்க உள்ளார். இந்நிலையில், புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த டொமினிக் ஜோசப் என்ற 51 வயதான நபர் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.
அந்த வீடியோவில், பதவியேற்பு விழாவில் பங்கேற்று டிரம்பை கொலை செய்வேன் என மிரட்டலாக பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாக பரவ ஆரம்பித்ததையடுத்து பொலிசார் உடனே டொமினிக் ஜோசப்பை கைது செய்தனர்.
ஆனால், டொமினிக் ஜோசப் மனநிலை பாதிக்கப்பட்டவர் என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இதனால், போலீசார் அவரது பின்னணி குறித்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் இவர் டொனால்ட் டிரம்பை எதிர்த்து போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டனுக்கு நெருக்கமான குடும்ப உறவினர் என்று கூறப்படுகிறது.

-http://news.lankasri.com

























