தமிழகத்தில் 4 நாட்களுக்கு முன்புவரை ஒரே ஒரு அலங்காநல்லூர் ஆக இருந்த இடம் இன்று அடங்காதநல்லூராக முழு இடமும் மாறிவிட்டது என்றால் அதற்கு ஒரே காரணம் இந்த ஜல்லிக்கட்டு போராட்டம்.
தமிழர்களின் ஒட்டுமொத்த உரிமைகளையும் அடக்கிய அரசு இனிமேலும் தமது கலாச்சாரத்தில் ஒரு சிறு துளியேனும் மூக்கினைநுழைக்க கூடாதென்பதே இந்த போராட்டத்தின் வெளிப்பாடாக உள்ளது.
வெறும் தமிழர்கள் மட்டுமே இங்கு ஆதரவினை தந்துகொண்டிருக்கின்றார்கள் என்று கூறுவது உண்மைக்கு புறம்பான செயேல். குறிப்பாக இன்று போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து உறவுகளுக்கும் எமது சகோதர மதத்தவர்கள் (முஸ்லிம் மக்கள்) உணவு வழங்கியுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
கடந்த 4 நாட்களுக்கு வெறும் தமிழகம் மட்டுமே ஜல்லிக்கட்டிற்காக போராட்டம் நடத்துகின்றது என்றால் ஏற்றுக்கொள்ள முடியாது. அமெரிக்க முதல் தமிழீழம் வரை கொந்தளிக்கின்றது இந்த ஜல்லிக்கட்டு தடைக்கு.
இவ்வாறு தமிழர்களின் ஒற்றுமையினை இங்கு வெளிப்படுத்துவதற்கு இலங்கையில் பல இடங்களில் பாரியளவிலான போராட்டங்கள் உருவெடுத்து வருகின்றது.
அந்த வகையில் நாளை தலைநகரான கொழும்பில் காலிமுகத்திடலில் போராட்டம் ஒன்று இளைஞர்களால் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த அளவிற்கு இளைஞர்கள் ஒன்று கூடுவார்கள் என இந்திய அரசு கண்டிருக்கவே இயலாது. மக்களை கலக்க கூட எண்ணுகின்ற அளவிற்கு இன்று மெரீனா கடற்கரைக்கு வடநாட்டு தமிழர்களும் அயல் கிராம மக்களும் கிடைக்கும் வண்டியில் எல்லாம் வந்து சேர்கின்றனர்.
நாளை குடியரசு தலைவர் நாட்டுக்கு வரும் பட்சத்தில் அவரிடம் சட்ட திருத்த அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் என்றும், தானே ஜல்லிக்கட்டை தொடங்கி வைப்பேன் என சென்னை விமான நிலையத்தில் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மகிழ்ச்சியாக பேட்டியளித்தார்.
எவ்வாறு இருந்தாலும் நாளை ஒரு உரிய முடிவினை பெறலாம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் இளைஞர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
-http://www.tamilwin.com