டிரம்ப் பதவி ஏற்றவுடன் பிரித்தானியாவிற்கு விழுந்த முதல் அடி..ஸ்தம்பித்த வீதிகள்: 1,00,000 பெண்கள் போராட்டம்

donaldஅமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள டிரம்பை எதிர்த்து உலகின் பல்வேறு இடங்களில் பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப் தெரிவு செய்யப்பட்டார். அவர் தெரிவு செய்யப்பட்டதில் இருந்து அமெரிக்காவில் பல பேராட்டங்கள் நடைபெற்றன. இருப்பினும் நாட்டின் 45 வது ஜனாதிபதியாக அவர் நேற்று பதவி ஏற்றுக் கொண்டார்.

பதவி ஏற்பு விழாவின் போது கூட வாஷிங்டனில் டிரம்புக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் உலக அளவில் 1,00,000 க்கும் மேற்பட்ட பெண்கள் டிரம்புக்கு எதிராக போராட்ட களத்தில் குதித்துள்ளனர். இதில் ஆயிரக்கணக்கானோர் லண்டனில் உள்ள Trafalgar சதுக்கத்தில் டிரம்ப்புக்கு எதிராக ஊர்வலம் நடத்தினர்.

இப்போராட்டத்தில் பிரபல நடிகையான Emma Thompson ம் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. பிரித்தானியாவின் Belfast, Cardiff, Lancaster, Leeds, Liverpool, Manchester, Shipley மற்றும் Edinburgh போன்ற இடங்களிலும் பெண்கள் டிரம்ப்புக்கு எதிராக போராட்டங்கள் நடத்தினர்.

மேலும் டிரம்ப் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்தால் கருகலைப்பு, பண்முகத்தன்மை மற்றும் கால நிலை போன்றவைகளில் மிகப்பெரிய பிரச்சனைகள் ஏற்படும் என்றும் பெண்களுக்கு பாதுகாப்பு பிரச்சனை ஏற்படும் என்ற அச்சத்திலும் அவர்கள் போராட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து பெண்கள் அமைப்பினர் டிரம்புக்கு எதிராக வாக்கு பதிவு மதிப்பீடு நடத்தவும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரித்தானியாவில் பெண்கள் நடத்தும் இந்த போராட்டதால், அந்நாட்டில் உள்ள வீதிகள் எல்லாம் பெண்கள் தலைகள் மட்டுமே காணமுடிவதாகவும், ஒரு போராட்டக்களம் போன்று காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.

பிரித்தானியாவில் மட்டுமின்றி அமெரிக்கா, பாரிஸ், ரோம், கார்டிப், சிட்னி என பல இடங்களில் ஆயிரக்கணக்கான பெண்கள் டிரம்புக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

-http://news.lankasri.com