அதிக ஆபத்து மிக்க தொற்றுநோய்கள் இவைதான்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

virusமருத்துவத்துறையில் ஏற்பட்டுள்ள புரட்சி காரணமாக பெருமளவான நோய்களுக்கும், தொற்றுநோய்களுக்கும் நிவாரணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

எனினும் மருத்துவ உலகைத்திற்கே இன்று வரையில் சிம்ம சொற்பனமாக திகழும் தொற்றுநோய்களும் இருக்கத்தான் செய்கின்றன.

இவ்வாறான நோய்கள் தொடர்பில் சுவிட்ஸர்லாந்து அரசும், உலக நாடுகளிலுள்ள விஞ்ஞானிகள் சிலரும் இணைந்து கடந்த வியாழக்கிழமை ஆய்வு ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

இவ் ஆவ்வின் முடிவில் Middle Eastern Respiratory Syndrome (MERS), Lassa காய்ச்சல் மற்றும் Nipah வைரஸ் (NiV) தொற்று என்பன அதிக ஆபத்து மிக்க தொற்றுக்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இவற்றின் தொற்றும் வேகம் அதிகமாக இருப்பதுடன், குணப்படுத்துவதற்கான சிகிச்சை முறைகளும் இதுவரை கண்டறியப்படாமல் இருப்பதுவுமே அதிக ஆபத்தாக காணப்படுவதற்கான காரணங்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் இந் நோய்களுக்கான தடுப்பு மருந்துகளை கண்டறிவதற்காக 460 மில்லியன் அமெரிக்க டொலர்களை சுவிட்ஸர்லாந்து அரசு ஒதுக்கியுள்ளதுடன், ஆராய்ச்சிகளும மும்முரப்படுத்தப்பட்டுள்ளன.

-http://news.lankasri.com