5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடன் எவரும் வெளியே இறங்க வேண்டாம்: எச்சரித்த லண்டன் மேயர்

londonபிரித்தானிய தலைநகர் லண்டனில் கடுமையான காற்று மாசு ஏற்பட்டுள்ளதால் வீட்டை விட்டு எவரும் வெளியே இறங்க வேண்டாம் என்று மேயர் சாதிக் கான் முதன் முறையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடுமையான காற்று மாசு ஏற்பட்டுள்ளதால் பேருந்து நிறுத்தம், ரயில் நிலையங்கள் மற்றும் சாலைகளை பயன்படுத்துவோர் மிகுந்த எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று லண்டன் மேயர் சாதிக் கான் முதன் முறையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடும் பனி மூட்டம் காணப்படுவதால் குறித்த நச்சுப்புகை மேலும் சில நாட்கள் தொடரும் எனவும், உடனடியான தீர்வுகள் எதுவும் தென்படவில்லை எனவும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

மட்டுமின்றி மாநகரின் பல பகுதிகளும் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில், St John Cass’s Foundation Pirmary School, the City, Marylebone Road, Swiss Cottage, Euston Road, Bloomsbury, Kensington & Chelsea, Richmond, Ealing, Brent, Enfield, Lambeth, Lewisham, Harrow, Hammersmith & Fulham, Redbridge, Greenwich and Tower Hamlets ஆகிய பகுதிகள் குறிப்பிடத்தக்கவை.

குறிப்பிட்ட பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும்,

3 மாதத்தில் இருந்து 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடன் எவரும் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுவெளிகளில் உடற்பயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்கள் கண்டிப்பாக இன்னும் சில நாட்கள் கைவிட வேண்டும் எனவும், மூச்சு தொடர்பான நோய்கள் மற்றும் இருதம் பாதிக்கக்கப்பட்டவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைபடி நடந்துகொள்ளவும் எச்சரித்துள்ளனர்.

லண்டன் வாழ் குடிமக்களின் உடல்நலனில் அக்கறையிருப்பதால் குறித்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்.

காற்று மாசை கட்டுக்குள் கொண்டுவரும் அனைத்து நடவடிக்கைகளும் எதிர்வரும் காலங்களில் மேற்கொள்ளப்படும் எனவும் சாதிக் கான் உறுதி அளித்துள்ளார்.

-http://news.lankasri.com