நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை ஏற்றுக் கொண்டுள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நாடு கடந்த தமிழீழ இராச்சியம் என்ற அமைப்பினை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் ஏற்றுக் கொண்டுள்ளார்.
அந்த அமைப்பின் பிரதிநிதிகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் உரையாற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24ம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 34ம் அமர்வுகள் ஆரம்பமாக உள்ளன. இந்த அமர்வுகளில் பங்கேற்பதற்காக நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் நான்கு பேர் ஜெனீவா செல்ல உள்ளனர்.
நாடு கடந்த தமிழீழ இராச்சியம் என்ற அமைப்பினை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஓர் அரச சார்பற்ற நிறுவனமாக பதிவு செய்துள்ளது.
இதேவேளை, நாடு கடந்த தமிழீழ இராச்சியம் என்ற அமைப்பு ஓர் கனவு அமைப்பு என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர குற்றம் சுமத்தியிருந்தார் என சிங்கள நாளிதழ் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
வாழ்த்துக்கள் தமிழ் ஈழ முதல் பிரதமர் திரு உத்திரகுமாரன் சார் அவர்களே……நிச்சயமாக நான் இதை ஆதரிக்கிறேன்.
1. இந்தச் சேதி எந்த அளவிற்கு உண்மையென்றுத் தெரியவில்லை. இந்தச் செய்தியை வெளியிட்ட சிங்களப் பத்திரிக்கை இலங்கையின் கடந்தக் கால வரலாறுகளை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கும் உண்மைப் புரியும். இந்தச் சேதி உண்மையென்றால் நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை ஏற்றுக் கொண்டுள்ளது தமிழர்களுக்கு மகிழ்ச்சிக்கு குறியச் செய்திதான். இந்தியா இதை ஏற்றுக் கொண்டுள்ளதா? இந்தியா ஏற்றுக் கொள்ளாமல் ஐநா மனித உரிமைப் பேரவை இதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆனால் பக்கத்துக்கு பெரிய நாடான இந்தியாவின் அணுகுமுறை இந்த தமிழீழக் கொள்கையில் எப்படியிருக்குமென்றுத் தெரியவில்லை. அன்றும் சரி; இன்றும் சரி இந்தியா இலங்கையின் அரசியலமைப்பு சட்டமென்றப் பேரில் பேரினவாத அரசின் கொள்கைகைக்குதான் முக்கியத்துவமும் ஆதரவும் கொடுக்கின்றார்கள். இதுவே இன்றும் அவர்களின் வெளியுறவுக் கொள்கையாக இருக்கின்றது. இப்போது வெளிவந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் இலங்கைக்கு முன்னுரிமையென்றச் செய்தியே இதற்க்கு நல்லச் சான்று. 2. இந்தியா புதிய வங்க தேசத்தை ஆதரித்தார்கள்; நாடுக் கடந்த திபெத்திய அரசை ஏற்றுக் கொண்டுள்ளார்கள்; ஆனால் தமிழீழத்தில் அவர்களின் நிலை முரண்பாடாகவுள்ளது. ஒன்றும் புரிய வில்லை!.
.
இதெல்லாம் சிங்களவர்கள் தமிழர்களைக் கிண்டல் செய்கின்ற வேலை! பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள்!