இந்தியாவின் புதிய கொள்கையின் கீழ் இலங்கைக்கு முன்னுரிமை

india-sri-lankaஅயல் நாடுகளுக்கு முன்னுரிமை வழங்கும் இந்திய அரசின் புதிய கொள்கையின் கீழ் இலங்கை அரசுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் இந்தியா மற்றும் இலங்கை இடையிலான உறவுகள் முன்னர் இல்லாத வகையில் வலுவடையும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்தியாவின் 68 வது குடியரசு தினத்தை முன்னிட்டு கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் இன்று நமைபெற்ற விசேட நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிகர் இதனை கூறியுள்ளார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தக தொடர்புகள் எதிர்காலத்தில் விசேடமான முன்னேற்றத்தை அடையும்.

வேகமாக முன்னேற்றமடைந்து வரும் இந்தியா பொருளாதாரத்தின் பிரதிபலன்கள் இலங்கைக்கும் கிடைக்கும் என இந்திய உயர்ஸ்தானிகர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இலங்கையில் கொல்லப்பட்ட இந்திய அமைதிப்படையினர் நினைவாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நினைவிடத்திலும் இந்திய தூதுவர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதனிடையே கண்டியில் உள்ள இந்திய துணை உயர்ஸ்தானிகர் இல்லத்திலும் இன்று இந்திய குடியரசு தின நிகழ்வு இடம்பெற்றது.

இதன் போது இந்திய தேசிய கொடி ஏற்றபட்டு, இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

இந்திய துணை உயர்ஸ்தானிகர் ராதா வெங்கடராமன் குடியரசு தினம் குறித்து சிறிய உரையை நிகழ்த்தினார்.

இந்த நிகழ்வில் மத்திய மாகாண ஆளுநர் நிலுகா ஏக்கநாயக்க உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

-http://www.tamilwin.com

TAGS: