வடக்கில் புனர்வாழ்வு அளிக்கப்படாத தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் என கொழும்பு ஊடகமொன்று குற்றம் சுமத்தியுள்ளது.
இறுதிக் கட்ட போரின் போது படையினரிடம் சரணடையாத சுமார் 300 தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் வடக்கில் இருக்கின்றார்கள்.
இந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் ஐரோப்பிய ஈழ புலம்பெயர் சமூகத்துடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வருகின்றனர் என வடக்கு இராணுவத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு புனர்வாழ்வு அளிக்கப்படாத முன்னாள் புலி உறுப்பினர்கள் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டிருப்பதாகவும், இவர்களுக்கு எதிராக இதுவரையில் சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கொழும்பு ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கு முன்னதாகவும் வடக்கில் குற்றச் செயல்கள் இடம்பெற்ற சந்தர்ப்பங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் புனர்வாழ்வுக்கு உட்படாத முன்னாள் போராளிகள் குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டுள்ளதாக தெற்கு ஊடகங்கள் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-http://www.tamilwin.com